உலகம்

  • நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படம் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியீடு
    விடாமுயற்சி திரைப்படம் மகிழ் திருமேனி எழுத்து இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். அதிரடி பரபரப்பூட்டும் இத்திரைப்படத்தை லைகா புரொடக்சன்சு சார்பாக சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரித்தார். இப்படத்தில் அஜித் குமார், திரிசா, அர்ஜுன் சர்ஜா, ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் பிப்ரவரி 6ம் தேதி உலகம் முழுதும் திரையிடப்படுகிறது
  • குவைத் நாட்டில் மரணமடைந்த இருவரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி
    R. கல்யாண முருகன் செய்தியாளர் விருத்தாசலம் குவைத் நாட்டில் மூச்சுத்திணறல் காரணமாக மரணமடைந்த இருவரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் நிவாரண நிதி வழங்கி ஆறுதல் தெரிவித்தார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்திற்குட்பட்ட மங்கலம்பேட்டையை சேர்ந்த முகமது யாசின் மற்றும் முகமது ஜுனைத் இரண்டு இளைஞர்கள் குவைத் நாட்டில் ஓட்டுநர்களாக பணியாற்றி வருகின்றனர்.இந்நலையில் கடந்த 19.1.2025 அன்று காலை இருவரும் தங்கியிருந்த அறையில் கடும் குளிரிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தீ மூட்டியுள்ளனர். நீண்ட இரவின் காரணமாக தீயை அணைக்காமல் அப்படியே உறங்கியதால் நெருப்புப் அணைந்து ஏற்பட்ட புகையினால் மூச்சுத் தினறல் ஏற்பட்டு மரணம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 5 இலட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டார். அதன்படி… Read more: குவைத் நாட்டில் மரணமடைந்த இருவரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி
  • தைவான் நாட்டு தம்பதியினர் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்
    எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே ஒளிலாயம் சித்தர் பீடத்தில் தைவான் நாட்டு தம்பதியினர் இந்து முறைப்படி அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பாத பூஜை செய்து திருமணம் செய்து கொண்டனர்.பட்டு வேஷ்டி,பட்டு சேலை அணிந்து தமிழர் மரபுபடி வாழ்த்திய உறவினர்கள். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த காரைமேடு சித்ததர்புரத்தில் 18 சித்தர்கள் அருள்பாலிக்கும் மிக பிரசித்தி பெற்ற ஒளிலாயம் சித்தர்பீடம் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த ராஜேந்திர சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்ட சித்தர்பீடத்தில் 18 சித்தர்களும் தனி சந்நிதி கொண்டு அருள் பாலித்து வருகின்றனர்.18 படிகள் கொண்ட விநாயகர் சந்நிதியுடன் கூடிய மகா லிங்கமும் இங்கு அமைந்துள்ளது. இத்தகைய சிறப்பு மிக்க சித்தர் பீடத்தில் பவுர்ணமி தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறும், மேலும் இங்கு தமிழகம் மற்றும் இன்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர்,தைவான் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில்… Read more: தைவான் நாட்டு தம்பதியினர் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்
  • வெளிநாட்டில் இறந்தவரின் உடல் குடும்பத்திற்கு கிடைக்க உதவிய சமூக ஆர்வலர்கள்
    நிருபர் K. பாக்கியராஜ்கீழக்கரை கீழக்கரை துபாயில் திருச்சியை சேர்ந்த அன்புராஜ் (38) தான் வேலை செய்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி பின்னரும் அங்கேயே சுற்றி திரிந்து அடையாளம் தெரியாமல் இறந்து கிடந்துள்ளார். இதையறிந்த துபாய் காவல்துறை இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்தனர் தூதரக அதிகாரிகள் (HOPE )சமூக சேவை துபாய் அமைப்பு மற்றும் கீழக்கரை கம்யூனிட்டி சென்டர் (KCC) குழு ஆகிய சமூக சேவை தோளர்களான இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த ராசிக், ஹசன் பாசித்,பாசித் இலியாஸ் VCK, ஜெய்னுல் ஆப்தீன், அப்துர் ரஹ்மான், ஹசன் பாய்ஸ், SKV சேக், மற்றும் சதாம் ஆகியோரின் உதவியை நாடினர் . சமூக வலைதளம் வாயிலாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் குடும்பம் பொருளாதார நழிவில் இருப்பதை அறிந்த தோழர்கள் இறுதி ஏற்பாட்டு செலவுகளை தாங்களே செய்துபின்னர் உடலை தாயகம் அனுப்பும் செலவுகளை இறந்தவர் வேலை பார்த்த நிறுவனத்தை… Read more: வெளிநாட்டில் இறந்தவரின் உடல் குடும்பத்திற்கு கிடைக்க உதவிய சமூக ஆர்வலர்கள்
  • அபுதாபியில் நடைபெற்ற தற்காப்பு கலை சாம்பியன்ஷிப் போட்டி-மூன்றாம் இடம் பிடித்த சீர்காழி பள்ளி மாணவன்
    எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி அபுதாபியில் நடைபெற்ற தற்காப்பு கலை சாம்பியன்ஷிப் (Pencak Silat) போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த சீர்காழி பள்ளி மாணவனுக்கு பள்ளி சார்பாக சாரட் வண்டியில் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து சென்று உற்சாக வரவேற்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விவேகானந்தா கல்வி குழுமத்தின் குட் சமாரிட்டன் பப்ளிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் சஞ்சீவ் (5th Junior World Pencak Silat Championship 2024) அபுதாபியில் நடைபெற்ற தற்காப்பு கலை போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து பதக்கம் பெற்றுள்ளார். இந்நிலையில் சொந்த ஊர் வந்தடைந்த பள்ளி மாணவனுக்கு சீர்காழி ரயில் நிலையத்தில் பள்ளி நிர்வாகம் சார்பாக மாலை அணிவித்து பள்ளி மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பள்ளி நிர்வாகம் சார்பில் சாரட் வண்டியில் பேண்ட் வாத்தியம் முழங்க ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து குட் சமாரிட்டன் பப்ளிக்… Read more: அபுதாபியில் நடைபெற்ற தற்காப்பு கலை சாம்பியன்ஷிப் போட்டி-மூன்றாம் இடம் பிடித்த சீர்காழி பள்ளி மாணவன்