- தாண்டிக்குடி கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் கள ஆய்வுதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் தாண்டிக்குடி கிராமத்தில் உள்ள ஜெ.ஜெ நகர் பகுதியில் வசித்து வரும் ஆதிவாசிகள் பழங்குடியினர் மக்களின் வீடுகளுக்கு பட்டா வழங்குவதற்காக பயனாளிகளிடம் திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர்.ஜெயபாரதி தாண்டிக்குடி கிராமத்திற்கு வீடுகளுக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்தார். அவருடன் கொடைக்கானல் மண்டல துணை வட்டாட்சியர்.ஜெயராஜ் மற்றும் தாண்டிக்குடி வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்மற்றும். நில அளவையர்கள் உட்பட பல்வேறு பொதுமக்களும் கலந்து கொண்டு ஆய்வு செய்தனர்.
- இந்து சமய அறநிலையத்துறை உயர்நிலை ஆலோசனைக்குழு உறுப்பினராக சங்கரன்கோவில் ச.தங்கவேலு நியமனம்இந்து சமய அறநிலையத்துறை உயர்நிலை ஆலோசனைக்குழு உறுப்பினராக சங்கரன்கோவில் ச.தங்கவேலு நியமனம் தமிழ்நாடு முன்னாள் கைத்தறித்துறை அமைச்சரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், சங்கரன்கோவில் முன்னாள் நகர் மன்ற தலைவருமான ச.தங்கவேலு இந்து சமய அறநிலையத்துறை உயர்நிலை ஆலோசனை குழு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டம். 1959 சட்டப்பிரிவு 7(1)-இன் கீழ் மேற்கண்ட ஆலோசனைக் குழுவில் அலுவல் சாரா… Read more: இந்து சமய அறநிலையத்துறை உயர்நிலை ஆலோசனைக்குழு உறுப்பினராக சங்கரன்கோவில் ச.தங்கவேலு நியமனம்
- பெரியபிள்ளை வலசையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டு விழாதென்காசி, கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரிய பிள்ளை வலசை ஊராட்சியில் ரூபாய் 22 லட்சம் செலவில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் செ.கிருஷ்ண முரளி எம்எல்ஏ கலந்து கொண்டார். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரிய பிள்ளை வலசை ஊராட்சியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 22 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர் தேக்க… Read more: பெரியபிள்ளை வலசையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டு விழா
- கரூர் உமா மருத்துவமனையில் இலவச எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவ முகாம்கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் உமா மருத்துவமனையில் இலவச எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவ முகாம்.கரூர் தாந்தோணி மலை உமா மருத்துவமனையில் இலவச எலும்பு,மூட்டு சிகிச்சை மருத்துவ முகாம் மருத்துவர் M. R மெய்யன்புராஜ்M. S(ortho)F. I. S. S(Spine), எலும்பு மூட்டு மற்றும் முதுகு தண்டுவட சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் அவர்கள் 200க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு இலவச சிகிச்சை அளித்தார். முகாமில் எலும்பு அடர்த்தியை கண்டறியும்4500 மதிப்புள்ளBMD பரிசோதனை செய்யப்பட்டன. கழுத்து… Read more: கரூர் உமா மருத்துவமனையில் இலவச எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவ முகாம்
- சீர்காழி மேற்கு ஒன்றிய திமுக சார்பாக பொதுக்கூட்டம்எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி தமிழக முதல்வரின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு சீர்காழி மேற்கு ஒன்றிய திமுக சார்பாக பொதுக்கூட்டம் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கரூர் முரளி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த எடகுடி வடபாதி ஊராட்சியில் தமிழக முதல்வரின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு சீர்காழி மேற்கு ஒன்றிய திமுக சார்பாக பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. சீர்காழி மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.ஜே… Read more: சீர்காழி மேற்கு ஒன்றிய திமுக சார்பாக பொதுக்கூட்டம்