தமிழ்நாடு

  • அரியலூர் அண்ணா சிலை, அருகில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர்கள் ஆர்ப்பாட்டம்
    அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் அண்ணா சிலை, அருகில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து கிரேடு 3 மற்றும் கிரேடு 4 அரசு ஊழியர்களாக முறைப்படுத்தி, ஊழியர்களுக்கு ரூ.26,000, உதவியாளர்களுக்கு ரூ.21,000 சம்பளம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடைத் தொகை ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்த அனைத்து அங்கன்வாடி பணியாளர்களையும் மேற்பார்வையாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்பு அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்குவது போல் ஒரு வருடம் வழங்க வேண்டும். மே மாதம் முழுவதும் விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்ட பொருளார் ஜோதிலட்சுமி தலைமை வகித்தார். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.… Read more: அரியலூர் அண்ணா சிலை, அருகில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர்கள் ஆர்ப்பாட்டம்
  • வலங்கைமான் அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் லியோ சங்க துவக்க விழா
    திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் குடந்தை சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் வலங்கைமான் தொழுவூர் அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் லியோ சங்க துவக்க விழா நடைபெற்றது. சங்கத் தலைவர் முரளி தலைமை வகித்தார், மாவட்ட ஆளுநர் சவரி ராஜ் புதிய லியோ சங்கத்தை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். லியோ சங்கங்கள் மாவட்ட தலைவர் செந்தில்குமார் பொறுப்பாளர்களை பணியில் அமர்த்தினார். எம் ஜே எஃப் லயன் மண்டல தலைவர் சங்கர லட்சுமி காளிதாஸ் உறுப்பினர்களை லியோ சங்கத்தில் இணைத்து சிறப்புரை ஆற்றினார். எம் ஜே எஃப் லயன் வட்டார தலைவர் கோபாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் லியோ சங்க பொறுப்பாளர்கள் தலைவர் சிவப்பிரகாஷ், செயலாளர் பவித்ரன், பொருளாளர் அபிஷேக், குடந்தை சிட்டி லயன்ஸ் சங்க செயலாளர் மணி, கல்லூரியின்முதல்வரும், குடந்தை சிட்டி லயன்ஸ் சங்க பொருளாளருமான ஜான் லூயிஸ்,லியோ அட்வைசர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
  • கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு
    ஈட்டியம்பட்டி கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த ஈட்டியம்பட்டி பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் பசுமாடு தவறி விழுந்தது அதனை அடுத்து பொதுமக்களின் தகவலின் பெயரில் , விரைந்து வந்த அரூர் தீயணைப்பு துறை வீரர்கள் , விவசாய கிணற்றில் உள்ள பசு மாட்டை பொதுமக்கள் உதவியுடன் கயிறு மூலம் , பசுமாட்டை உயிருடன் மீட்டனர் ,
  • உடற்கல்வி ஓவியம் தொழிற்கல்வி பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் ஸ்டாலின் திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பணிநிரந்தரம் செய்ய வேண்டும்
    உடற்கல்வி ஓவியம் தொழிற்கல்வி பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் ஸ்டாலின் திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பணிநிரந்தரம் செய்ய வேண்டும்: தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் அறிக்கை : தமிழகத்தில் 2012 ஆம் ஆண்டு அரசு நடுநிலை உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் உடற்கல்வி ஓவியம் தொழிற்கல்வி பாடங்களில் 16 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களாக வாரம் மூன்று அரைநாட்கள் என மாதத்திற்கு பன்னிரெண்டு அரைநாட்கள் பணிபுரியும் வகையில் நியமிக்கப்பட்டார்கள். பணியில் சேரும்போது ரூபாய் 5 ஆயிரம் தொகுப்பூதியமாக அப்போது வழங்கப்பட்டது. சம்பள உயர்வு முதன் முதலில் 2014 ஆம் ஆண்டு இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதை அடுத்து 2017 ஆம் ஆண்டு சம்பள உயர்வு எழுநூறு ரூபாய் வழங்கப்பட்டது. பின்னர் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சம்பள உயர்வு இரண்டாயிரத்து முந்நூறு ரூபாய் வழங்கப்பட்டது. அப்போது நான்காயிரம் காலியிடங்கள் போக, 12,483 பகுதிநேர ஆசிரியர்கள் தான் பணிபுரிந்தனர். இந்த… Read more: உடற்கல்வி ஓவியம் தொழிற்கல்வி பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் ஸ்டாலின் திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பணிநிரந்தரம் செய்ய வேண்டும்
  • கோவை பாராளுமன்ற தொகுதி கணபதி ராஜ்குமாரை சந்தித்த மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினர்
    கோவை பாராளுமன்ற தொகுதி கணபதி ராஜ்குமாரை சந்தித்த மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினர் ஹாஜி முகமது ரபி தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினர் ஹாஜி முகமது ரபி,கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் அவர்களை சந்தித்து சிறுபான்மை மக்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்.. கோரிக்கைகளை உடனடியாக பரிசீலிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் தெரிவித்தார்.. இந்த சந்திப்பின் போது சாய்பாபாகாலனி பகுதி கழக செயலாளர் கே எம் ரவி பல் சமய நல்லுறவு இயக்க செய்தி தொடர்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்…