அ.சிராஜுதீன் மாவட்ட செய்தியாளர் கும்பகோணம்.

கும்பகோணம் மகாமகத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இந்தியா முழுவதும் ஒரு கோடி பக்தர்கள் திரள்வார்கள்.

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு.

தமிழகத்தில் ஊழலுக்கு எதிராக நடைபயணம் மேற்கொண்டுள்ள பா.ஜனதா மாநில தலைவர் அண்ணா மலை கும்பகோணம் பகுதியில் நடைபயணம் செய்தார். கும்பகோணம் புதிய பஸ் நிலையப் பகுதியில் நடை பயணத்தை தொடங்கினார்.

பின்னர் அங்கிருந்து கும்பகோணம் – தஞ்சை சாலை வழியாக கும்பகோணம் உச்சிபிள்ளையார் கோவில், கும்பகோணம் காந்தி பூங்கா உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்ற பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நடைப் பயணம் செய்தார். அதன் பின்னர் கும்பகோணம் மடத்து தெரு பகுதியில் பிரசார வாகனத்தில் நின்று மக்களிடையே பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கும்பகோணம் நடைபயணம் மூன்று முறை ஒத்திவைப்புக்கு பிறகு எழுச்சியோடு இந்த நடைபயணத்தை தொடங்குகிறேன். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் மூன்றாவது முறையாக பாரத பிரதமர் பதவி ஏற்க வேண்டும்.கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் 16 வது பொருளாதார வளர்ச்சியிலிருந்து 5வது பொருளாதார நாடாக இந்தியா மாறி உள்ளது. அமெரிக்க, ரஷ்யா பேரரசு போல் இந்தியா பேரரசு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் குடும்ப ஆட்சி,ஊழல் ஆட்சியில் இருந்து திமுகவை அப்புறப்படுத்த வேண்டும்.

மாநில முதல்வர்கள் பாரதப் பிரதமர் சந்திப்புக்கு நேரம் கேட்டு செல்வதுதான் வழக்கம். ஆனால் தமிழக முதல்வர் டெல்லி சென்று பாரதப் பிரதமர் சந்திப்புக்கு நேரம் கேட்டு பெற்றது இந்திய அரசியல் வரலாற்றில் கிடையாது.

திமுகவில் 11 அமைச்சர்கள் ஊழல் வழக்கு குறித்து நீதிமன்ற விசாரணையில் உள்ளது.அமைச்சர்கள் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்பட 3 அமைச்சர்கள் எந்நேரம் வேண்டுமானாலும் சிறை செல்ல வழக்கு உள்ளது. திமுக அரசு 30 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளது.

மூன்று லட்சம் ஐம்பதாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது ஆனால் 20 ஆயிரம் பேருக்கு கூட வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை.

மத்திய அரசு திருக்குறள்,தமிழ் மொழி இருக்கைகள் காசி தமிழ் சங்கம் 46சங்க இலக்கியங்கள் என மொழிபெயர்ப்புக்கு 700 கோடி செலவு செய்துள்ளது.ஆனால் பிரதமர் மோடியை தமிழர்களுக்கான எதிரி என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகிறது.ஆனால் இந்தியா முழுவதும் தமிழை திணித்து வருபவர் பிரதமர்
மோடி.

கடந்த 1980 முதல் கும்பகோணத்தில் மகாமகம் நேரங்களில் திமுக ஆட்சியில் இருப்பதில்லை அதுபோல் வருகிற 2024 நடைபெறும் தேர்தலில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பதவி ஏற்பார்.

வருகிற தேர்தலில்
பாஜக ஆட்சி அமைத்து கும்பகோணம் மகாமகத்திற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இந்தியா முழுவதும் ஒரு கோடி மக்கள் திரண்டு மகாமக விழாவை சிறப்பாக நடைபெறும் என அவ்வாறு பேசினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *