கீலக்கலங்கல் பெரியகுளத்தில் மீன்பாசி ஏல குத்தகையை நிறுத்திவைக்க கிராம மக்கள் கோரிக்கை மனு;-

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழகலங்கல் கிராமத்தில் பெரியகுளத்தில் மீன் பாசி ஏல குத்தகையை தற்காலிகமாக நிறுத்திவைக்க கோரி கீலக்கலங்கல் ஊர் பொதுமக்கள் சார்பில்
ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர், ஆலங்குளம் ஒன்றிய துணை சேர்மன் செல்வ கொடிராஜமணி ஆகியோர் தலைமையில் ஆலங்குளம் பிரிவு
கோட்டா பொறியாளர் சிற்றார் வடி நிலக்கோட்ட உதவி பொறியாளர் அலுவலர்
ரகுமானிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த கோரிக்கை மனுவில்:-

எங்கள் கிராமத்தில் பெரியகுளம் உள்ளது தற்போது சமீபத்தில் கன மழையினாள் பெரியகுளம் நிரம்பி உள்ளது.
இக்குளத்தின் நீர் சுமார் 2- மாதங்கள் மட்டுமே நீர் இருப்பு உள்ளதாக இருக்கும்.
எனவே இந்தப் பெரிய குளத்தின் நடப்பாண்டு 2023-24ம் ஆண்டி மீன் வாசி ஏலத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு இதனையே பொதுமக்களின் கோரிக்கையாக ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்திருந்தது.

மனுவை பெற்று கொண்ட உதவி பொறியாளர் பொது மக்களின் கோரிக்கை ஏற்று கொள்வதாக உறுதியளித்தார்.

நிகழ்வில் முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் சூட்டுசாமி, பால் கூட்டுறவு செயலாளர் மகேஷ்வரன், ஒப்பந்ததாரர் கருப்பசாமி. உள்பட பலர் உடனிருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *