கோவை மாவட்ட சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு சார்பில் தென் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டது.

தூத்துக்குடி, நெல்லை,உள்ளிட்ட தென் தென் மாவட்டங்களில் கடந்த 17, 18ஆம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் கடும் சேதம் அடைந்தன.வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணிகளில் தனியார் அமைப்புகள் ,அரசு பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கோவை மாவட்ட சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு சார்பில் போர்வை, பாய்,சோப்பு,எண்ணெய்,அரசி உள்ளிட்ட சமையலுக்கு தேவையான நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது.

சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தேவையான பொருட்களை கோவையிலிருந்து தென் மாவட்டத்திற்கு நேரடியாக சென்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

முதற்கட்டமாக தற்போது நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும்,தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க உள்ளதாக சுன்னத் ஜமாஅத் கூட்டமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்..

இந்த நிகழ்வில் சுன்னத் ஜமாஅத் கொள்கை கூட்டமைப்பு பொது செயலாளர் அல்ஹாஜ் M.A.இனாயத்துல்லாஹ்,துணை செயலாளர்
கோவை பைசல்,கோயமுத்தூர் ஹிலால் கமிட்டியின் தலைவர் மெளலவி அல்ஹாஜ் M.A.அப்துர்ரஹீம் இம்தாதி பாகவி,செயலாளர் அல்ஹாஜ் A..நாசர்தீன்,கரும்புக்கடை ஷம்சுல் இஸ்லாம் ஹனஃபி சுன்னத் ஜமாஅத் செயலாளர் அல்ஹாஜ் V.A.கபீர்,மஸ்ஜிதுல் ஜன்னா ஹனஃபி சுன்னத் ஜமாஅத் தலைவர் அல்ஹாஜ் KTS ரியாஸ் கபூர்,உள்ளிட்ட கோவையில் உள்ள பல்வேறு ஜமாஅத் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *