பாலமேடு ஜல்லிக்கட்டு வாடிவாசல் வர்ணம் பூசும் பணி துவக்கம் இந்த ஆண்டும் கார் பைக் நாட்டுப் பசு உள்ளிட்ட உயரக |பரிசு வழங்குவதாக
ஜல்லிக்கட்டு கமிட்டி அறிவிப்பு.

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜனவரி 16ஆம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு நிகழ்வுக்காக
மஞ்சமலை ஆற்று திடலில் அமைந்துள்ள வாடிவாசல் காளைகள் வெளியேறும் இடம் காளைகள் சேகரிக்கும் இடம் ஆகியவை சுத்தப்படுத்தும் பணியும் வர்ணம் பூசும் பணியும் நடந்து வருகிறது.

இதற்கான முன்னேற்பாடு பணிகளை பேரூராட்சி செயல் அலுவலர் தேவி,பேரூராட்சி தலைவர் சுமதிபாண்டியராஜன் துணைத் தலைவர் ராமராஜ். உள்ளிட்ட பேரூராட்சி நிர்வாகம்
செய்துவருகிறது .

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி ஏற்பாடு, பரிசுகள் சேகரிப்பு, முக்கிய பிரமுகர்களுக்கான அழைப்பு விடுத்தல் ஆகிய பணிகளை பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு விழா கமிட்டி மற்றும் பாலமேடு பொது மகாலிங்க சுவாமி கிராம கமிட்டி தலைவர் மலைச்சாமி, செயலாளர் பிரபு, பொருளாளர் ஜோதிதங்கமணி ,மற்றும் கமிட்டி
உறுப்பினர்கள் சங்கரலிங்கம், யராமன்,கிருஷ்ணன், குமரேசன், சுரேஷ்.சந்திரன், ராஜமாணிக்கம், முத்துச்செல்வம், ஆகியோர் இதற்கான பணிகளை செய்து வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து ஜல்லிக்கட்டு கமிட்டி செயலாளர் பிரபு கூறியதாவது கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது .

ஜல்லிக்கட்டுக்கு நீதிமன்றத்தில் இருந்த தடையை நிரந்தரமாக நீக்குவதற்கு சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மதிப்பிற்குரிய ஸ்டாலின் அவர்களுக்கு பாலமேடு கிராம மக்கள் சார்பாகவும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார் .

இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி வெகு பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் ஆண்டுதோறும் நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்து அனைத்து ஏற்பாடுகளும் செய்து வரும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி மற்றும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் ஆலோசனையின் படியும்நீதிமன்ற வழிகாட்டுதல் படியும் மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இரண்டு அடுக்கு பாதுகாப்பு தடுப்பு வேலி ,காளைகள் வெளியேறும் இடம் வரை காளைகளுக்கு எந்த விதமான இடையூறும் இன்றி செல்வதற்கான பாதை அமைக்கும் பணிபார்வையாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அமர்வதற்கான தனித்தனி மேடைகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் முறையாக செய்யப்பட்டு வருகிறது.

அதே போல் நேற்று புத்தாண்டு தினத்தன்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி அவர்களையும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், ஆகியோரை
நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு வழக்கம் போல் சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரர்கள் ஆகியோருக்கான கார், பைக், நாட்டு பசு, உள்ளிட்ட உயர்ரக பரிசுகளும் வழக்கம்போல் வழங்கப்படும்.டிவி ,பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர், சைக்கிள், கட்டில் . சேர், உள்ளிட்ட தங்கம். வெள்ளி,, காசுகள் ஆகியவை வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *