கோவில் பாப்பாக்குடி ஊராட்சியில் மக்களுடன்முதல்வர் திட்டம்

அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் கோவில்பாப்பாகுடி ஊராட்சிக்குட்பட்ட பகுதி மக்களின் பல்வேறு குறைகளை தீர்த்து வைக்கும் விதமாக மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் நடந்தது. இதற்காக சிக்கந்தர் சாவடி பகுதியில் உள்ள தனியார் திருமண. மண்டபத்தில் தமிழ்நாடு அரசின் 13 க்கு மேற்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் தனித்தனியாக முகாம் அலுவலகம் அமைத்து பொதுமக்களிடம் குறை தீர்ப்பு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர் .


இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை கோவில் பாப்பாக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், தலைமையில் துணைத்தலைவர் சோனை, முன்னிலையில் திட்ட முகாம்
கடந்த காலங்களில் பொதுமக்கள் தங்களது அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக ஒவ்வொரு அரசு அலுவலகங்களுக்கும் மனு கொடுப்பதற்காக நாள்தோறும் அலைந்து பண விரயமும் கால விரையமும் ஏற்பட்டது.

ஏழை எளிய அடித்தட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களுடன் முதல்வர் என்ற மகத்தான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார் இந்த திட்டத்தின் மூலம் மக்களை தேடி அனைத்து துறை அதிகாரிகளும் ஒரே இடத்தில் அமர்ந்து பொதுமக்களின் அனைத்து விதமான தேவைகளுக்குமான கோரிக்கைகளை மனுக்களாக பெற்று அந்த மனுக்களுக்கு உடனடி தீர்வு காணும் விதமாக இந்த முகாம் நடைபெற்று வருகிறது

தற்பொழுது தற்பொழுது ஒரு சில ஊராட்சி பகுதிகளில் மட்டும் நடைபெறும் இந்த மக்களுடன் முதல்வர் திட்டம் விரைவில் அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு மக்களின் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்பட தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.
இந்த முகாமில் காவல்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பிற்பட்டோர்நலத்துறை ,வாழ்வாதார கடன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, மாற்றுத்திறனாளிகள் துறை உள்ளிட்ட 13 க்கும் மேற்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு அதற்கான தீர்வுகளை பொதுமக்களுக்கு தெரிவித்தனர் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *