பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் தனியார் கல்வியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகளுடன் கல்லூரி மாணவ மாணவிகள் ஆட்டம்பாட்டம் என உற்சாகமாக கொண்டாடினர்….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் உள்ள ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கல்லூரி தாளாளர் கலியமூர்த்தி தலைமையிலும் கல்லூரி முதல்வர் முனைவர் மில்டன் ராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது.
விழாவில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்று கும்மியடித்து குலவி சத்தம் போட்டு பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர் அதனை தொடர்ந்து இசை நாற்காலி பானை உடைத்தல் குண்டூசி குத்துதல் உள்ளிட்ட மாணவ மாணவிகளின் திறன்கள் வளர்ச்சி தரும் நோக்கில் பல்வேறு போட்டிகள் மற்றும் மாணவ மாணவிகளின் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் அலுவலக ஊழியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டு பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடினர்.