கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி விழிப்புணர்வு ஜோதி ஏந்திய பிரச்சார வாகனம் தஞ்சாவூருக்கு வருகை.

        தஞ்சாவூர் 6 வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் கேலோ இந்தியா ஜோதி ஏந்தி பிரச்சார விழிப்புணர்வு வாகனம் வருகை புரிந்து, தீர்க்க சுமங்கலி மஹாலில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்தும் 6 வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2024 ஜனவரி 19 முதல் ஜனவரி 31 வரை சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, செங்கல்பட்டு மற்றும் மதுரை ஆகிய தமிழகத்தின் 5 மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.

       இதையடுத்து அன்னை சத்யா விளையாட்டரங்கில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள், ஓவிய போட்டிகள். பேச்சு போட்டிகள் மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மினி மாராத்தான் போட்டி, பளுதூக்குதல் போட்டியும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு நடைபெற்றது.

      கேலோ இந்தியா ஜோதி ஏந்திய பிரச்சார விழிப்புணர்வு வாகனம்  தஞ்சாவூர் மாவட்டத்தில் சுற்றுபயணம் மேற்கொண்டது. பிரச்சார விழிப்புணர்வு வாகனத்துடன் உடற்கல்வி ஆசியர்களுடன் பைக் பேரணியும், ஐடிஐ மைதானம், தூய அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி வளாகம், செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி மைதானம், பழைய பேருந்து நிலையம், பெரியகோவில் மற்றும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மேம்பாலம் வரை சுற்றுப் பயணமாக தீர்க்க சுமங்கலி மஹாலுக்கு வந்தடைந்ததைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர்.தீபக் ஜேக்கப் தலைமையில், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் அவர்கள் முன்னிலையில் வழங்கிளார்கள்.

       இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் திருவையாறு துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் டி.கே.ஜி.நீலமேகம், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர்.சண் இராமநாதன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர்.ஆர்.உஷா புண்ணியமூர்த்தி. மாநகராட்சி துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி, வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெ.டேவிட் டேனியல், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பெ.கற்பகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *