கடலூர் மாவட்டம் சி.என்.பாளையத்தில் கரிநாள் திருவிழாவையொட்டி அங்குள்ள மலைக்கோயிலில் 5 லட்சம் பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஒவ்வோர் ஆண்டும் பொங்கல்திருவிழாவிற்கு பிறகு கரிநாளில் சி.என்.பாளையம் மலைக்கோயிலில் திருவிழா நடப்பது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 9−00மணிக்கு விக்னேஸ்வரர் பூஜை, கணபதி ஹோமம் நடந்தது.

அதனைத்தொடர்ந்து 108 மூலிகைப்பொடி பஞ்சமூர்த்தி சிறப்பு அபிஷேகம் நடந்தது.மதியம் 1−00 மணிக்கு மூலவர் மகா தீபாராதனையும் நடந்தது. இரவு 10−00மணிக்கு பஞ்சமூர்த்தி மாடவீதி உற்சவம் நடக்கிறது.அதிகாலை 3.30 க்கு மகா கணபதி தெப்பஉற்சவம் நடக்கிறது.

பக்தர்கள் 5 லட்சத்திற்கும் அதிகமாக கலந்துகொள்வதால் பந்தோபஸ்து பணிகளை கடலூர்மாவட்ட போலீசார் நடுவீரப்பட்டு சப்−இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் பாதுகாப்புபணியை மேற்கொண்டுள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *