பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரியில் குடியயரசு தின விழா கொண்டாட்டம் ….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரியில் 75- வது குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கல்லூரி அளவில் பல்கலைகழகத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி ஹல்லிமா ஹாஜிரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மூவர்ண கொடியை ஏற்றினார்.

தொடர்ந்து கொடிப்பாடல், கொடி வணக்கத்துடன், நாட்டுப்பண் பாடப்பட்டு மாணவிகள் உறுதி மொழி ஏற்றனர்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் கலியமூர்த்தி முன்னிலை வகித்தார்.

கல்லூரி முதல்வர் முனைவர்.மில்டன்ராஜ் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.

விழாவில் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்கள் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *