அதிமுகவின் ஆட்சியை இழந்து விட்டோமே என மக்கள் வருத்தப்படும் அளவுக்கு திமுக. ஆட்சி மீது வெறுப்படைந்துள்ளதாக திருவாரூரில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக மாவட்ட மாணவரணி சார்பாக மொழிப் போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் மாவட்ட மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் சுரேந்தர் தலைமையில் நடைபெற்றது கழக அமைப்பு செயலாளரும் திருவாரூர் மாவட்ட கழக செயலாளருமான முன்னாள் அமைச்சர் இரா காமராஜ் பங்கேற்று பேசும்போது
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பித்து 51 ஆண்டுகள் ஆன நிலையில், 32 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. இது வரலாறு. எல்லாவற்றிற்கும் ஸ்டிக்கர் ஒட்டும் திமுக அரசு இதற்கு ஸ்டிக்கர் ஒட்ட முடியாது.

அதிமுக ஆட்சியை இழந்து விட்டோமே என மக்கள் வருத்தப்படுகின்றனர். திமுக ஆட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில் அதிமுக ஆட்சியே இருந்திருக்கலாம் என மக்கள் என்னும் நிலைக்கு தற்போது உள்ள ஆட்சியில் வெறுப்படைந்துள்ளனர்.

உலகத் தமிழர் மாநாடை அண்ணாவிற்கு பிறகு எம்ஜிஆர், அதன் பிறகு புரட்சித்தலைவி அம்மாவும் நடத்திக் காட்டினார்கள். இந்த வாய்ப்பு கருணாநிதிக்கு, ஸ்டாலினுக்கோ கிடைக்கவில்லை. மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் கூட்டம் நடத்த முழு தகுதியும் அதிமுகவிற்கு மட்டுமே உள்ளது என்றார்.

பொதுக்கூட்ட நிகழ்வில், கழக அமைப்பு செயலாளர் சிவா. ராஜமாணிக்கம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பொன்.வாசுகி ராம் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் இளைஞர் இளம்பெண்கள் பாசறை இளைஞர் இளம்பெண்கள் பாசறை எஸ் கலியபெருமாள் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி சின்ராஜ் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ரயில் டி. பாஸ்கர் தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் தியாகராஜன் நகரக் கழக செயலாளர்கள் திருவாரூர் ஆர்டி மூர்த்தி திருத்துறைப்பூண்டி சண்முகசுந்தர் கூத்தாநல்லூர் ராஜசேகர் ஒன்றிய கழக செயலாளர்கள் திருவாரூர் தெற்கு பிகேயு மணிகண்டன் வடக்கு ஜி எஸ் செந்தில் வேல் கொரடாச்சேரி பாஸ்கர் சேகர் உள்பட மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *