கருப்பு பேட்ச் அணிந்து உண்ணாவிரத போராட்டம்..” தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலகம் சங்கம் சார்பாக குடவாசலில் நடைபெற்றது..

திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன்பாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் குடவாசல் கிளையின் சார்பாக கருப்பு பேட்ச் அணிந்து உண்ணாவிர போராட்டம் நடைபெற்றது..

திருவாரூர் மாவட்டத்தில் பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு வழங்கிய 1159 பயனாளிகளிடம் ரூபாய் 13.39 கோடி வசூலிக்கவும், தவறினால் வட்டார வளர்ச்சி அலுவலர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், பணி மேற்பார்வையாளர், ஊராட்சி செயலர் ஆகியவரிடம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளதை ரத்து செய்ய கோரி, கடந்த 23. 1. 2024 அன்று, திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறையீடு செய்யப்பட்டது.. ஆனால் இதுவரை உத்தரவை ரத்து செய்யவில்லை …
எனவே, உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.. என்ற கோரிக்கையை வலியுறுத்தி,இன்று குடவாசல் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள்.. கருப்பு பேட்ச் அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வில் மாவட்டத் தலைவர் வசந்தன், மாவட்ட செயலாளர் கே. எஸ். செந்தில், மாவட்ட பொருளாளர் சிவகுமார் உள்ளிட்ட மாவட்ட துணை தலைவர்கள், மாவட்ட இணை செயலாளர், மகளிர் துணைக் குழு அமைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

பேட்டி: அமர்நாத்
மாவட்ட இணை செயலாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *