கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் யானை மங்கலத்திற்கு பராமரிப்பு சிறப்பு விருது

டெல்லி லோத் தந்திரா அவுர் ஜனதா சார்பில் வழங்கினர் தஞ்சை மாவட்டம்
கும்பகோணத்தில் 2000 ஆண்டுகள் பழமையான ஆதி கும்பேஸ்வரர் கோவில் உள்ளது

இங்கு உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் சாமி தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் யானை மங்களம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசிபுரிந்து வருகிறது.

கோவிலில் நடக்கும் அனைத்து விழாக்களுக்கும் யானையின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. அனைத்து விழாக்களிலும் யானைக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இந்த யானை கோவிலில் நடக்கும் பூஜைகளில் பங்கேற்று சுவாமிக்கு இறைப்பணியாற்றி வருகிறது.குழந்தை போல் பழகும் குணம் கொண்ட யானை மங்களத்திடம் (வயது 56)

இந்த கோவிலில் பராமரிக்கப்பட்டு வரும் யானை மங்கலம் மிகவும் சுட்டித்தனம் வாய்ந்தது. மங்கலம் யானை மற்றும் அதனை பராமரிக்கும் யானை பாகன்களுடன் குறும்புத்தனம் செய்யும் பல வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது பரவி பெரும் வரவேற்பு பெற்று வந்துள்ளது.

இந்த நிலையில் டெல்லி தன்னார்வ தொண்டு நிறுவன லோத் தந்திரா அவுர் ஜனதா சார்பில் தமிழகத்தில் 38 யானைகள் பராமரிப்பு பணிகளை
ஆய்வு செய்தனர்.

அப்போது கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் யானை மங்கலம் சிறந்த முறையில் பராமரிப்பு செய்த பணிக்காக முதல் பரிசு பெற்றது.

இதனையடுத்து தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் சுதன் பாலன், அஜீத் குமார் ஆகியோர் யானை மங்கலம் பராமரிப்பாளர் அசோக்யிடம் நினைவு பரிசு மற்றும் விருதுகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பலர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *