தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜ் நகர் தெற்கு தெருவில் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் நற்பணி மன்றம் துவக்கப்பட்டது

இந்தக் கூட்டத்தில் தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் டி கே பாண்டியன் தலைமை ஏற்றார் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் அருள் லிங்கம்,ரோஸ் வணிக வளாக நிறுவனர் அகமது மைதீன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்

நெல்லை கார்ஸ் , ஸ்பேர்ஸ் மற்றும் பைனான்ஸ் நிறுவனர் வரவேற்புரை வழங்கினார் கல்லூரணி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார்சி றப்பு விருந்தினராக பங்கேற்றார்.

ஏபி.ஜெ அப்துல் கலாம் நற்பணி மன்ற நிர்வாகிகளாக
தலைவர் வேணி, கிருஷ்ணகுமாரி,துணைத் தலைவர் தங்கராணி ,பொதுச் செயலாளர் நாகராஜன்,
பொருளாளர்முகமது யாசின்,செயலாளர்களாக
ரவி, ஜான் அலெக்ஸ் பாண்டியன் ,செந்தில்,
கௌரவ ஆலோசகராக நெல்லை கார்ஸ் , ஸ்பேர்ஸ் மற்றும் பைனான்ஸ் நிறுவனர்கௌரவத் தலைவர்களாகடி கே பாண்டியன்,அருள் லிங்கம் ராஜ்குமார் ஆகியோர் ஒரு மனதாக நிர்வாசிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

பின்னர் மாத சந்தா தொகை மாதம் 100 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது அதனை யெடுத்து
இந்த தெருவின் பல்வேறு வளர்ச்சிக்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வர வேண்டும் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் தெருவிற்கு சாலை மற்றும் குடிநீர் வசதி செய்து தந்த கல்லூரணி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமாருக்கு நன்றி தெரிவிக் கப்பட்டது.

நமது ஆ.பி.ஜெ அப்துல் கலாம் தெருவிற்கு கிழக்கே உள்ள எஸ் டி கே மாடர்ன் ரைஸ்மில்லில் இருந்து வரும் சாம்பல் கழிவுகளால் சிறு குழந்தை முதல் முதியவர் வரை உடல்நிலை பாதிப்பு ஏற்படுவதால் அதை சரி செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏ.பி.ஜெ அப்துல் கலாம் நற்பணி மன்றத்தின் சார்பாக தெருவின் நுழைவு வாயிலின் முகப்பில் பெயர் பலகை வைக்க மன்றம் அங்கீகரித்தது.

பிரதி மாதம் முதல் வெள்ளி அன்று இரவு 7 மணி அளவில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்பன பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது

பின்பு தெருவின் வளர்ச்சிக்காக அவர வர் விருப்பப்படி நிதிகளை வழங்கினர்கள் .

இக்கூட்டத்தில்
காளி ராஜன் சுஜிதா உயர்தர உணவக நிறுவனர்,
வெள்ளத்துரை,ராமச்சந்திரன்,சந்திர கலா,காஞ்சனா,
டி கே கவிதா ,மங்கையர்கரசி,சிவராமலிங்கம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *