முடுவார்பட்டி ஊராட்சியில் பால் உற்பத்தியாளர் சங்க கட்டிடம் மற்றும் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

அலங்காநல்லூர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டி ஊராட்சியில் தேசிய மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2022- 2023 ஆண்டுக்கான கலைஞர் நூற்றாண்டு விழா பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடம் ரூபாய் 16.46 லட்சம் செலவிலும் மற்றும் 14 வது நிதிக்குழு மானியம் 2018 – 2019 ஆண்டுக்கான கலைஞர் நூற்றாண்டு விழா கட்டிடம் ரூபாய் 8.62 லட்சம் செலவிலும் 30,000 ஆயிரம் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு திமுக நிர்வாகி மணிமாறன் தலைமை தாங்கினார் சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட அவைத்தலைவர் எம்.ஆர்.எம். பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், ஒன்றிய குழு தலைவர்
பஞ்சுஅழகு, துணைத் தலைவர் சங்கீதாமணிமாறன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைச்செல்வி,
பிரேமாராஜன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணிஅசோகன், ஒன்றிய துணைச் செயலாளர் அருண்குமார், பாலமேடு நகர செயலாளர் மனோகரவேல் பாண்டியன், பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரிகோவிந்தராஜ், துணைத் தலைவர் சுவாமிநாதன், தெத்தூர் சீனிவாசன், அரசு வழக்கறிஞர் பார்த்தசாரதி, கிழக்கு ஒன்றிய பொருளாளர் சுந்தர், தனிச்சியம் செல்லமணி, ஊராட்சி செயலர் செல்வமூர்த்தி, மாவட்டத் துணை அமைப்பாளர் பிரதாப், சோழவந்தான் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தண்டலை தவசதீஷ், பொறியாளர் அணி ராகுல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *