ஜே .சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் 2024 முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட. ஆட்சியர் தி.சாருஸ்ரீ செய்தியாளர்களை சந்தித்தார் .

செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தததாவது
திருவாரூர் மாவட்டத்தில் நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் 2024, முன்னிட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க பறக்கும் படை குழுக்கள் (குளுவு) ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 3 வீதம் 12 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.


மேலும், தொகுதிக்கு மூன்று வீதம் நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு மொத்தம் மாவட்டம் முழுவதும் 12 குழுக்கள் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் கண்காணிப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ளன. தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் மீறப்படுவது தொடர்பான புகார்களை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுபாட்டு அறைக்கு 1950 மற்றும் 1800-425-3578 என்ற இலவச அழைப்பு தொலைபேசி எண் மூலம் தெரிவிக்கலாம்
உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்
திருவாரூர் மாவட்டத்தில் 72 பதற்றமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. பொதுமக்கள் 50 ஆயிரம் ரூபாய் கையில் கொண்டு செல்லலாம். அதற்குமேல் கொண்டு செல்லும் பணத்திற்கு கையில் உரிய ஆவணங்கள் வைத்துக் கொள்ள வேண்டும் வங்கிகளில் பணபரிமாற்றத்தை கண்காணிக்க வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த. 72 மணி நேரத்திற்குள் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகள் புகைப்படங்களை அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது


தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாராந்திர மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் விவசாயிகள் குறைத்தீர்க்கும் கூட்டம் போன்ற அரசு நிகழ்வுகள் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்படும்வரை நடைபெறாது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்தார்
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுபாட்டு அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட. ஆட்சியர் தி.சாருஸ்ரீ பார்வையிட்டார்
செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர்(தேர்தல்) வேணி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் பத்திரிக்கையாளர்கள் புகைப்படக்காரர்கள் ஒளிப்பதிவாளர்கள் பங்கேற்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *