திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் உள்ள திமுக தலைமையிலான கூட்டணி கட்சியின் அலுவலகத்தில் பேரூர் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வலங்கைமான் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீ. அன்பரசன் தலைமையில், வலங்கைமான் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் நரசிங்கமங்கலம் கோ. தட்சிணாமூர்த்தி, நகரச் செயலாளர் பா. சிவனேசன் ஆகியோர் முன்னிலையில், கட்சியின் நிர்வாகிகள், பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன், துணைத் தலைவர் க. தனித்தமிழ் மாறன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் அனைத்து அணி பொறுப்பாளர்கள், வார்டு செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இந்தியா கூட்டணி நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் வை. செல்வராஜ் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும், 05.04. 24 வெள்ளிக்கிழமை அன்று திருவாரூருக்கு வருகை தரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை வரவேற்க பேரூர் திமுக சார்பில் திரளாக கலந்து கொள்வது என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.