சீர்காழி அருகே கோதண்டபுரம் கிராமத்தில்மும்முனை மின்சாரம், மற்றும்கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள்சாலை மறியல் .

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கோதண்டபுரம் கிராமத்தில் புளியந்துறை ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டை கண்டித்தும், விவசாய பாசனத்திற்கு மும்மனை மின்சாரம் வழங்காததை கண்டித்தும் . மேலும்கிராம பகுதிகளில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்காததை கண்டித்து கொள்ளிடம் -அளக்குடி சாலையில் கோதண்டபுரம் கிராமத்தில்சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் நேதாஜி தலைமையில் சாலையில் அமர்ந்து அடிக்கடி ஏற்படும் மின்வெட்டை கண்டித்தும். விவசாயிகள் தற்போது கோடைகால குருவை சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது இதற்கு தேவையான மீன் மோட்டார் களுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வலியுறுத்தியும். கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பி தமிழக அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தியாகராஜன் ,உமாசங்கர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் .பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை அதனால் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து கொள்ளிடம், புதுப்பட்டினம் காவல் ஆய்வாளர் , ஹேமலதா முத்துலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அப்பொழுது மின்துறை மற்றும் கூட்டு குடிநீர் திட்ட வடிகால் வாரிய அதிகாரிகளை அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இதற்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர்.

பின்னர் சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த சாலை மறியல் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *