சோழவந்தான் மே17

சோழவந்தான் அருகே வடகாடுப்பட்டி பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் மார்நாடு மனைவி சொர்த்தம்மாள் 70.. சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்த போனநிலையில் தனது மூன்று மாற்று திறனாளி மகள்கள் சுந்தரவள்ளி சுதா.பாண்டியராணி. ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சொர்ணத்தம்மாளுக்கு சொந்தமான சர்வே எண். 287./2.b .ல் உள்ள 4.செண்ட் வீட்டடி இடத்தில் வனதேவி என்பவரிடம் வாங்கிய கடனுக்காக 800.சதுர அடி இடத்தை வனதேவி பெயரில் ஈடு அடமான பத்திரமாக சோழவந்தான் ரிஜிஸ்டர் ஆபிஸில் சொர்ணத்தம்மாள் சுதா ஆகிய இருவர் மட்டுமே கையெழத்து போட்டு பதிவு பத்திரம் செய்து கொடுத்துள்ளனர்.

இதையெடுத்து வனதேவி இறந்தபோனதால் மகன் ஜெயக்குமாரிடம் சொர்ணத்தம்மாள் வாங்கிய கடனை திரும்ப செலுத்தி அடமான ஈடு பத்திரத்தை கேட்டபோது. அந்த 800.சதுரடி இடத்தை கிரையம் செய்து உள்ளதாக ஜெயக்குமார் கூறி அதற்குரிய பத்திரம் இருப்பதாக கூறி அந்த இடத்தை சுற்றி கம்பி வேலி அமைத்தநிலையில் இடத்தை மீட்டுதரக்கோரி. கடந்த 2021.ம் ஆண்டில் வாடிப்பட்டி உரிமையியல் நீதிமன்றத்தில் சொர்ணத்த ம்மாள் வழக்கு தொடர்ந்து உள்ளார் .

இந்நிலையில் ஜெயக்குமார் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு உள்ள இடத்தில் பாத்ரூம் உள்ளிட்ட கட்டிட வேலையை தொடங்கியதால் இதை தடுத்து நிறுத்தக்கோரி பிப்.4.ந்தேதி சொர்ணத்தம்மாளின் மாற்றுதிறனாளி மகள் சுதா காடுப்பட்டி போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.

இப்புகாரின்பேரில் விசாரணை செய்து ஜெயக்குமாரின் கட்டிட வேலையை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்காமல் போலீசார் வி சாரணை என்ற பெயரில் மாற்று திறனாளி பெண்களை .அலக்கழிக்கபட்டு வரும் அவலநிலை தொடர்கின்றது.

இது குறித்து மாற்றுதிறனாளி சுதா. .எனது தாயார் சொர்ணத்த. ம்மாளுக்கு சொந்தமான 4.செண்ட் வீட்டடி இடத்தில் வனதேவிடம் வாங்கி பத்தாயிரம் கடனுக்கு ஈடு அடமானமாக 2.செண்ட் இடத்தை எழத படிக்க தெரியாத தாயாரும் நானும் கையெழத்து போட்ட நிலையில் தற்போது கிரையம் பெற்று உள்ளதாக ஜெயக்குமார் கூறியதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்து உள்ளோம் .தற்போது வழக்குள்ள இடத்தில் ஜெயக்குமார் மற்றும் குடும்பத்தினர்.

வீடு கட்டி வருவதை தடுக்க கோரி காடுபட்டி போலீசில் புகார் கொடுத்து உள்ளேன். விசாரணை என்ற பெயரில் நடக்கமுடியாத எங்களை அலக்கழித்து முறையான நடவடிக்கை எடுக்காமல் போலீசார் காலதாமதம் செய்து வருகின்றனர்.

மேலும் இது குறித்து சமூக ஆர்வலர் கல்யாணசுந்தரம். கூறியதாவது:.
வடகாட்டுபட்டியை சேர்ந்த சொர்த்தம்மாளுக்கு மூன்று பெண்களும் கால்கள் செயலிழந்து நடக்க முடியாமல் உள்ளநிலையில் .ஈடுகடன் என்ற கூறி எழதப்படிக்க தெரியாதவர்களிடம் போலியான கிரைய ஆவண பத்திரத்தில் சொர்ணத்தம்மாள் மற்றும் சுதா விடம் மட்டுமே கையெழத்து பெற்று மேஜர் பெண்கள். சுந்தரவள்ளி மற்றும் பாண்டியராணி ஆகியோரிடம் கையெழத்து போடாதநிலையில் கிரயம் செல்லாதநிலையில் மாற்றுதிறனாளி குடும்பத்திற்கு சொந்தமான நீதிமன்றத்தில் வழக்குள்ள இடத்தில் வனதேவி மகன் ஜெயக்குமார் வீடு கட்டுவதை தடுக்ககோரி போலீசில் புகார் கொடுத்துள்ளநிலையில் மா இது வரை நடவடிக்கை எடுக்காமல் போலீசார் காலம் தாழ்த்தி வருவது ஏன் என தெரியவில்லை என வேதனை தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *