திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாயனூர் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், ஹரிணி என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். குடும்பத் தகராறு காரணமாக ஹரிணி தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சதீஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் சதீஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்ணை க. மாரிமுத்து.
