கோவை மாநகராட்சி 27 வது வார்டிற்கு உட்பட்ட பகுதியில் ரூ20 லட்சம் மதிப்பீட்டிலான புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை.செந்தமிழ்ச் செல்வன் துவக்கி வைத்தார்
கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 27ல் கங்குவார் வீதி, பேரநாயுடு வீதி, துரைசாமி லே அவுட் பகுதியில் ரூ20 லட்சம் மதிப்பீட்டில் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை 27 ஆவது மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால் முன்னிலையில்,
கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை.செந்தமிழ்செல்வன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஆவாரம்பாளையம் பகுதி பொறுப்பாளர் மோகன்ராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தனபால், துணை அமைப்பாளர் மணிகண்டன், வட்ட துணை செயலாளர் செந்தில்குமார், மகளிர் அணி லோகேஸ்வரி, வேலுசாமி, அன்பழகன், ரமேஷ்குமார், மதிவாணன், அகமது பாஷா, ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, அன்பரசி, திலகவதி, தேவி, ரத்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
