திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது;-
இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள (Special Intensive Revision) 27.10.2025-அன்று அறிவித்துள்ளது. 
அதன்படி, ஏற்கனவே 1951 முதல் 2004 வரை 8 முறை சிறப்பு தீவிர திருத்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைசியாக 2002-2004 காலகட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தமானது நடைபெற்றது. இதற்கிடையில் வாக்காளர் பட்டியலில் தொடர்ச்சியான இடமாற்றம், ஒரே வாக்காளர் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பது, இறந்த வாக்காளர்கள் நீக்கப்படாதது மற்றும் வெளி நாட்டவர்களின் தவறான சேர்ப்பு ஆகிய காரணங்களால் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இதன் காரணமாக இந்திய தேர்தல் ஆணையத்தால் சிறப்பு தீவிர திருத்தமானது அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும்,
வாக்காளர்களும் முந்தைய சிறப்பு தீவிர திருத்த தரவினை பெறுவதற்கு இந்திய தேர்தல் ஆணைய தரவுதளத்தினை (https:// voters,eci.gov.in) அணுகலாம் என தெரிவித்தார்.
