மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு நுழைவு தகுதி தேர்வாக இந்திய அளவில் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில்,கோவை ஆகாஷ் பைஜூஸ் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயின்ற,கோவையை சேர்ந்த, ஜேக்கப் பிவின் நகரத்தில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்;

NEET UG 2023 இல் அகில இந்திய தர வரிசைப்பட்டியலில் 36வது இடத்தைப் பிடித்துள்ள இவர், மருத்துவ நுழைவுத் தேர்வில் 720க்கு 710 மதிப்பெண் பெற்று அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.. ஜேக்கப் பிவினுக்கு ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் தலைமை செயல் அதிகாரி அபிஷேக் மகேஸ்வரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதே போல கோவையின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆகாஷ் பைஜூஸ் மையங்களில் பயின்ற மாணவ,மாணவிகளும் சிறந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.. சஞ்சனா 705 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய தரவரிசையில் 91 வது இடமும்,இதே போல சினிக்டா,துருவ் ராம்ராஜ்,சிரிஷ்,ஹர்சரிதா,அதிதி ஹரிசங்கர்,வர்ஷினி,நவீனா ஆகிய மாணவ,மாணவிகளும் சிறந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் மாணவ,மாணவிகளுக்கான பாராட்டு விழா கோவை அவினாசி சாலையில் உள்ள ஆகாஷ் பைஜூஸ் மையத்தில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக ஆகாஷ் பைஜீஸின் தமிழக இணை இயக்குனர் சஞ்சய் காந்தி கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.இந்நிகழ்ச்சியில் அகாடமிக் இயக்குனர் ஸ்ரீனிவாச ரெட்டி,வர்த்தக மேலாளர் ராம்கி,உட்பட மாணவ,மாணவிகளின் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *