சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் பூட்டை உடைத்து பதிவேடுகள் சான்றிதழ்கள் விளையாட்டு பொருட்கள் சத்துணவு கூட பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்கள்

வாசலில் அறிவியல் பாட உபகரணமான எலும்புக்கூட்டை தொங்க விட்டுச் சென்றதால் பரபரப்பு

திருவொற்றியூர்

சென்னை திருவொற்றியூரில் திருச்சினாங்குப்பம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 11 பிள்ளைகள் மட்டுமே படிக்கும் கட்டிடம் பழுதடைந்து காணப்படுகிறது .

இதனால் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு பள்ளி பூட்டப்பட்டு அதில் படிக்கும் மாணவ மாணவியர்கள் அருகில் உள்ள அரசு பள்ளிக்கு மாற்றப்பட்டனர். மாநகராட்சி பள்ளி கட்டிடம் மிகவும் பழுதடைந்து இடியும் நிலையில் உள்ளதால் கல்வி உபகரணங்கள் பதிவேடுகள் பீரோவில் வைத்து வகுப்பறை பூட்டப்பட்டு இருந்தன
இந்நிலையில் நேற்று மர்ம நபர்கள் பள்ளியின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் வைத்திருந்த 50 ஆண்டுகள் பழமையான பதிவேடுகள் கோப்புகளை கிழித்து தரையில் வீசி சென்றுள்ளனர்.

மேலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பாடம் கற்பிப்பதற்காக கொடுத்துள்ள கல்வி உபகரண பெட்டியில் அறிவியல் சார்ந்த பொருட்கள் கணினி பொருட்கள் அனைத்தும் சேதப்படுத்தி உள்ளனர். சத்துணவு கூடத்தில் உள்ளே நுழைந்து எலக்ட்ரானிக்ஸ் ஸ்டவ் மிக்ஸி கிரைண்டர் உள்ளளிட்டவற்றை அள்ளிச் சென்றுள்ளனர்.

கடந்த எட்டு மாதங்களாக பூட்டப்பட்டு பழுதடைந்து உள்ளதால் சமூக விரோதிகள் உள்ளே மது அருந்துவதும் சமூக விராத செயலில் ஈடுபட்டதுமாக தொடர்ந்து வந்த நிலையில்
நேற்று பள்ளியில் உள்ளே நடந்த இந்த சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் சசி ரேகா திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகார் அடிப்படையில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் திருடிய மர்ம நபர்கள் அறிவியல் உபகரணங்களான எலும்புகூட்டை வாசலில் தொங்கவிட்டு பயமுறுத்தி சென்றது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *