வலங்கைமான் அருகில் பள்ளி செல்லக்கூடிய மாணவர்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தக் கோரி மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் வலங்கைமான்-மன்னார்குடி பிரதான சாலையில் அமைந்துள்ள அமராவதி பகுதியிலிருந்து பிரிந்து செல்லக்கூடிய சாலையில் சுமார் 7கிலோ மீட்டர் தொலைவில் புளியக்குடி
உள்ளிட்ட மூன்று ஊராட்சிகள் உள்ளன.

புளியக்குடி, திருவோண மங்கலம், அமித்ரவல்லி உள்ளிட்ட கிராமங்களில் 3000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் வலங்கைமான் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இவர்கள்
நாள்தோறும் பள்ளிக்கு செல்ல வேண்டுமானால்
அவர்கள் வசிக்கக்கூடியஇருப்பிட பகுதியிலிருந்து 7கிலோ
மீட்டர் நடந்து வந்து அமராவதி பேருந்து நிறுத்தத்தில் ஏறி அதன் பிறகு தான் பள்ளி செல்ல வேண்டும்.

அங்கும் பிரதான சாலையில் சரிவர பேருந்துகள் நிற்காமல் செல்லுவதால் மாணவர்கள் குறித்த நேரத்தில் பள்ளி செல்ல இயலவில்லை. இதனால்பல நாட்கள் அவர்களுக்கு பள்ளியில் விடுப்பு என பதிவு செய்யப்பட்டு, அவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருப்பதாக அந்த மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் பிரதான சாலையில் இருந்து ஊர் இருக்கக் கூடிய பகுதிக்கு 7கிலோமீட்டர் நடந்தே செல்வதால் அந்த பகுதி முழுவதும் காடாக, சீமைக்கருவேல செடிகள் சூழ்ந்து இருப்பதால் பள்ளிக்கு செல்லக்கூடியமாணவிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இந்நிலையில் புளியக்குடி உள்ளிட்ட மூன்று ஊராட்சிகள் உள்ள பகுதிக்கு ஒரு பேருந்து காலை 10.30 மணியளவில் செல்லுகிறது. அந்த பேருந்தால் எந்த பலனும் இல்லை. எனவே அந்த பேருந்தை மாணவர்களின் நலன் கருதி பள்ளி செல்லும் நேரத்திற்கும், பள்ளி விட்டு வீடு திரும்பும் நேரத்திற்கும் பேருந்து வரக்கூடிய நேரத்தை மாற்றி அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்து 100 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், 200 க்கும் மேற்பட்ட கிராம பொது மக்கள் வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக கோஷங்கள் எழுப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை கொடுத்தார்கள். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக
காணப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *