புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவிற்கான ஒன்றிய அளவிலான கலை இலக்கிய போட்டிகள் கந்தர்வகோட்டையில் நடைபெற்றது.

கந்தர்வகோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கந்தர்வகோட்டையில் புத்தகத் திருவிழாவிற்கான கலை இலக்கிய போட்டிகள் கந்தர்வகோட்டை வட்டார தலைவர் ரகமதுல்லா தலைமையில் தொடங்கியது.

வட்டாரச் செயலாளர் சின்னராஜா அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, மீனம்பாள், மாவட்ட இணைச்செயலாளர் துரையரசன் , ஆசிரியர் பயிற்றுநர் பாரதிதாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் முத்துக்குமார் போட்டியை தொடங்கி வைத்து பேசும்பொழுது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு கலை இலக்கிய போட்டிகள் ஒன்றிய அளவில் ஜுலை 14 ஆம் தேதி ஒன்றிய அளவிலான போட்டியில் நடைபெற்றது.

இப்போட்டிகள் 6-8,9-10,11-12 என தனித்தனி பிரவாக நடைப்பெற்றது. பேச்சுப்போட்டி தலைப்புகளான பெண்மையை போற்றுவோம், வாசிப்போம் நேசிப்போம், நூலை படி,வாழ்வியல் அறிவியல் அறிவை விரிசெய், இனிக்கும் இலக்கியம் , கவிதை போட்டி புத்தகமே போதிமரம், நூலகம் திறவுகோல், ஓவியப்போட்டி திருக்குறள் காட்சிகள் ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றது.

ஒன்றிய அளவிலான போட்டிகளில் முதலிடம் பெற்றவர்கள் மட்டுமே மாவட்ட அளவிலான நிறைவு போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்.

ஒன்றிய அளவிலான போட்டிகளுக்கு ஒரு பள்ளியிலிருந்து ஒரு போட்டிக்கு இருவர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.

இம்மாதம் 28 முதல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும் விழாவில் இந்திய விஞ்ஞானிகள், கவிஞர்கள், விருதுபெற்ற முன்னணி எழுத்தாளர்கள், திரைப்பட பாடலாசிரியர்கள், பேச்சாளர்கள் கலந்துகொண்டு மாலைநேரங்களில் உரையாற்றுகிறார்கள், அதேபோல காலை நேரங்களில் மாணவர்கள் விஞ்ஞானிகள் சந்திப்பு, அறிவியல் அற்புதங்கள், மந்திரமா தந்திரமா, கணக்கும் இனிக்கும், காகித மடிப்பு கலை, கோளரங்கம், அறிவியல் விளையாட்டுகள் போன்றவைகளும் மாணவர்களின் மாலை நேர கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும் வகையில் 10 நாள்களும் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டு நடத்தப்படுகின்றன.

வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிரகாஷ் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். போட்டியில் முதலிடம் தேர்வு பெற்று மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ளக்கூடிய ஓவிய போட்டி ஆறு முதல் எட்டாம் வகுப்பு ஹரி சேகரன், ஒன்பது முதல் பத்து வகுப்பு முதலிடம் நவநீதகிருஷ்ணன், பதினொன்றாம் வகுப்பு முருகேசன், பேச்சுப்போட்டி ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை முதல் இடம் பரிவர்த்தினி, ஒன்பது முதல் பத்தாம் வகுப்பு விக்னேஸ்வரி, பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முதல் இடம் ரமா, கவிதை போட்டி ஆறு முதல் எட்டாம் வகுப்பு மதுயாழினி , ஒன்பது முதல் பத்தாம் வகுப்பு பவானி 11 மற்றும் 12 ஆம் வகுப்பு முதல் இடம் குணசீலன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

போட்டியின் நடுவர்களாக தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி,மீனம்பாள், புவனேஸ்வரி, முருகன்,தனலெட்சுமி, உடற்கல்வி ஆசிரியர் பரிமளா,காரத்திகா தேவி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள் தமிழ்மணி,தவமணி ,இந்துமதி ஆகியோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *