கோவையில் நடைபெற்ற இந்திய இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தேசிய மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இன்சூரன்ஸ் துறை தொடர்பான நிபுணர்கள் கலந்து கொண்டனர்…

காப்பீட்டு துறை தொடர்பான கல்வி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி குறித்த திறன்களை வளர்த்தி கொள்ள கடந்த 1955 ஆண்டு இன்ஷூரன்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பின் சார்பாக இன்சூரன்ஸ் துறை தொடர்பான தொழில் நுட்ப திறன்களை தெரிந்து கொள்ளும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மாநாடு மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக,,இன்சூரன்ஸ் துறை தொடர்பான நவீன தொழில் நுட்ப மாற்றங்கள் குறித்து இன்சூரன்ஸ் துறை சார்ந்தவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக இந்திய இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தேசிய அளவிலான மாநாடு கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.

68 ஆம் ஆண்டாக நடைபெற்ற இதில் சுற்றுச்சூழல்,சமூகம் மற்றும் ஆட்சி என இ.எஸ்.ஜி.எனும் தலைப்பில் கருத்தரங்குகள் நடைபெற்றன. கோயம்புத்தூர் இன்ஷூரன்ஸ் இன்ஸ்டிட்யூட்டின் வைர விழா ஆண்டின் ஒரு பகுதியாகவும் நடைபெற்ற மாநாட்டை இந்திய இன்சூரன்ஸ் இன்ஸ்டிட்யூட் தலைவர் மற்றும் ஜி.ஐ.சி ரீயின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தேவேஷ் ஸ்ரீவஸ்தவா துவக்கி வைத்தார்.

செபியின் முழு நேர உறுப்பினர் மற்றும் எல்ஐசி வாரியத்தின் தனி இயக்குனர் ஓய்வு பெற்ற குருமூர்த்தி மகாலிங்கம் தலைமை உரை நிகழ்த்தினார்..

இரண்டு நாட்கள் நடைபெற உள்ள மாநாட்டில் மகாராஷ்டிரா, கர்நாடாகா,ஆந்திரா,அசாம்,குஜராத்,உத்தரபிரதேசம் என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த காப்பீட்டு துறை சார்ந்த நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

இதில், மாறிவரும் பொருளாதார மற்றும் நவீன தொழில்நுட்ப சூழ்நிலைகளுடன் இடர் கண்டறிதல். மதிப்பீடு மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் தொழில் துறை தேவைகளை பூர்த்தி செய்ய காப்பீட்டு கல்வியில் பாடங்களை வடிவமைப்பது தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து நிபுணர்கள் பேசினர்…

முன்னதாக நடைபெற்ற மாநாடு துவக்க விழாவில், கோயம்புத்தூர் இன்ஷூரன்ஸ் இன்ஸ்டிட்யூட் அமைப்பின் தலைவர் ராஜேந்திரகுமார்,செயலாளர் பிரசாத்,துணை தலைவர் வெற்றிவேல்,பொருளாளர் பிரவீண் குமார்,இணை செயலாளர் நாசர்,கமிட்டி உறுப்பினர் மகாலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *