லிஸ்யு மெட்ரிக் பள்ளியில் சுதந்திரத் திருநாளில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தி மிதிவண்டி பேரணி நடைபெற்றது.

லிஸ்யு பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் ஒரு சிறந்த அனுபவத்தின் நாளாக மாறியது. தலைமையாசிரியர் தேசியக் கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர், இயக்குனர், திவ்யோதயா சர்வமத மையம், கோவை அவர்கள் தலைமையேற்று தனது உரையில் சுதந்திரத்திலிருந்து அமைதியை ஒருபோதும் பிரிக்க முடியாது, சுதந்திரம் இல்லாமல் யாரும் அமைதியை அனுபவிக்க முடியாது என்பதை வலியுறுத்தினார். மேலும் பள்ளி தலைமையாசிரியர் அவர்களை சமூகத்தின் நல்வாழ்வுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு புதுமையான நிகழ்ச்சிகளுக்கு வாழ்த்தி பாராட்டினார்.

நமது நாட்டின் 77வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர் அவர்களின் தலைமையில் லிஸ்யு பள்ளி மாணவர்கள் அமைதி மற்றும் நல்லிணக்க மன்றம் மூலம் ஒருமைப்பாட்டு செய்தியை பரப்ப மிதிவண்டி பேரணியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

பேரணியை பள்ளி முதல்வர் அருட்தந்தை முனைவர் வழக்கறிஞர் ஜாய் அரக்கல் பச்சைக்கொடி அசைத்து துவக்கி வைத்தார். அமைதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி சாய்பாபா காலனியின் சுற்றுவட்டாரப் பகுதியில் மிதிவண்டியில் வலம் வந்தனர்.

நீங்கள் பூமியில் எவ்வளவு நேரம் செலவழித்தீர்கள், எவ்வளவு பணம் சம்பாதித்தீர்கள் அல்லது எவ்வளவு கவனம் பெற்றீர்கள் என்பது முக்கியமல்ல, வாழ்க்கையில் நீங்கள் வெளிப்படுத்திய நேர்மறை அதிர்வின் அளவுதான் முக்கியமானது என்ற செய்தியை இப்பேரணி எதிரொலித்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *