கோவை

தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டியில் கோவை மாணவர்கள் அசத்தல்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டியில் கோவையை சேர்ந்த மாணவ,மாணவிகள் 2 தங்கம் உட்பட 12 பதக்கங்கள் வென்று அசத்தல்…

வாக்கோ இந்தியா எனும் தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம்,ராஞ்சியில் நடைபெற்றது.இதில் இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 3000 த்திற்கும் அதிகமான மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

தமிழக அணி சார்பாக கோவை குணியமுத்தூர் பிரேம் எம்.எம்.ஏ.அகாடமி பிரேம் குமார் மற்றும் துடியலூர் ஆண்ட்லீ பிளாக் பெல்ட் அகாடமி ஆனந்த் ஆகியோர் தலைமையில் கோவையை சேர்ந்த 17 மாணவ,மாணவிகள் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் கோவையை சேர்ந்த மாணவ,மாணவிகள் 2 தங்கம் 6 வெள்ளி,4 வெண்கலம் என 12 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர்.

இதில் இரண்டு தங்க பதக்கங்களை அபிஷேக்,மன்சர் ஆகிய இருவரும் முகமது கவுஸ் பாஷா,நித்திஷ்,சஞ்சய், பவன்,தாரகேஸ்வரன்,சூர்யா ஆகியோர் வெள்ளி பதக்கங்களையும்,மாணவி அஸ்மிதா, வினோ வர்ஷன்,ராகேஷ்,ஹரிஷ் ஆகியோர் வெண்கல பதக்கங்களையும் வென்றுள்ளனர்.இந்நிலையில் கோவை இரயில் நிலையம் வந்த மாணவ,மாணவிகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

கடினமான பயிற்சி செய்ததால் தேசிய அளவில் சாதிக்க முடிந்தததாகவும்,அடுத்து நடைபெற உள்ள சர்வதேச போட்டிகளில் வென்று நாட்டிற்கு பெருமை சேர்ப்போம் என வெற்றி பெற்ற மாணவ,மாணவிகள் நம்பிக்கை தெரிவித்தனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *