கோவையில் நடைபெற்ற இந்திய அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட (Fit From Home) ஃபிட் பிரம் யோகா ஸ்டுடியோ யோகா மையத்தை சேர்ந்த மாணவ,மாணவியர் பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினர்..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி,அங்கலகுறிச்சி பகுதியில் செயல்பட்டு வரும் ஃபிட் பிரம் ஹோம் யோகா ஸ்டுடியோ சார்பாக பதினைந்துக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு யோகா பயிற்சி அளித்து வருகின்றனர்.

யோகா மையத்தின் நிறுவனர் அகிலாண்டேஸ்வரி தலைமையில் கோவை கணபதி பகுதியில் நடைபெற்ற இந்திய அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் ஃபிட் பிரம் ஹோம் யோகா ஸ்டுடியோ வில் பயிற்சி பெறும் மாணவ,மாணவிகள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர்…

மூன்றரை வயது முதல் ஐம்பது வயது வரையிலான போட்டியாளர்களுக்கு சப் ஜூனியர்,ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் உள்ளிட்ட பிரிவுகளில், ஆர்ட்டிஸ்டிக், ரிதமிக், அத்லெட் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
இதில்,விருட்சாசனம்,கூர்மாசனம், மயூர் ஆசனம், திருவிக்கிரமா ஆசனம், சிரசாசனம்,சக்ராசனம்,என பல்வேறு ஆசனங்களை செய்து மாணவ,மாணவிகள் அசத்தினர்..

தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கபட்டது.
இதில் தேர்வு செய்யப்பட்ட ஃபிட் பிரம் ஹோம் ஸ்டுடியோ மையத்தில் பயிற்சி பெற்றி வரும் மகிழன் கனகசபாபதி,யஷ்வந்த்,கவினாஸ்ரீ,மற்றும் பிரணிதா,கவுரி,இன்பானந்தன்,ஸ்ரீபத்ரா,விஷ்வதரணி ஆகியோர் முதலிடம் பிடித்தனர்..இதே போல ஸ்ரீநிதி பப்ளிக் பள்ளி முதலிடமும்,பர்ப்பிள் டாட்ஸ் இராண்டமிடமும் பிடித்தன..

வெற்றி பெற்ற மாணவ,மாணவிகள் தாய்லாந்து,பஹ்ரைன்,கோவா,அந்தமான் உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ள சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளதாக ஃபிட் பிரம் ஹோம் ஸ்டுடியோ யோகா மைய நிறுவனர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்தார்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *