வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோயில் வளாகத்தினுள் செல்போன்கள் அதிகம் பயன்படுத்துவதால் முழு மனதோடு சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதி!

செய்தியாளர் ச. முருகவேல். நெட்டப்பாக்கம். புதுச்சேரி.

வில்லியனூர் திருக்காமேஸ்வரர் குளக்கரையில் அதிகம் பேர் செல்போனை பயன்படுத்துவதால் பக்தர்கள் இறைவனை சிந்திக்க முடியாமல் சிரமப்படுகின்றனர் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? ஆலய வளாகத்தினுள் செல்போன் பயன்படுத்த தடைவிதிக்க இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க முன் வருமா?

வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோயிலுக்கு தினம் தினம் 1000 கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் மன அமைதிக்காகவும் இறைவனை ஒருமித்த கருத்துடன் தியானம் செய்வதற்காகவும் பக்தர்கள் இங்கு வருவது வழக்கம் ஆனால் அங்குள்ள குளக்கரையில் பக்தர்களாக வந்தவர்கள் குளக்கரையை ஒரு பூங்காவாகவும் தன் வீட்டு இல்லமாகவும் கருதி செல்போனை அதிக சத்தத்துடனும் சினிமா பாடல்கள் நாடகம் ஒரு மொபைல் தியேட்டராகவே அங்கு செல்போனை பயன்படுத்துகிறார்கள் இதனால் உண்மையாக இறைவனை தரிசிக்க வந்த பக்தர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி சிரமப்படுகின்றனர் “இறைவன் பாதத்தில் ஈடுபடும் சொல்லலால் பிற வார்த்தை யாதொன்றும் பேசற்க ஆலயத்துள்” என்று அங்கே ஒரு செய்யுள் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதை யாரும் கடைப்பிடிப்பதாக தெரியவில்லை இறைவனை தரிசிக்க வரும் அந்த ஒரு அரை மணி நேரமாவது நாம் செல்போனை தவிர்க்க வேண்டும் என்று அனைவரும் உணர வேண்டும். இதனால் மற்ற பக்தர்கள் முழு மனதோடு இறைவனை தரிசிக்க முடியும். தியானம் செய்ய முடியும். ஆகவே இந்து அறநிலையத்துறை அனைத்து இந்து ஆலயங்களிலும் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *