கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ.முகேஷ்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் நாட்டு நலப்பணித் திட்டம், கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் .

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பிலும் கிருஷ்ணகிரி மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பிலும் பல்வேறு போட்டிகள் (14 .11 . 2023 ) செவ்வாய் கிழமை அன்று நடைபெற்றது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கான நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படி இளையோர் நலன் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் கல்லூரியின் வணிக கணினிப் பயன்பாட்டியல் துறைத்தலைவர் முனைவர் மா.ஜெகன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் சு.தனபால் அவர்கள் தலைமை தாங்கினார்.

தன்னுடைய தலைமை உரையில், மாணவ மாணவியர்கள் பல்வேறு தனித்திறமைகளை வளர்த்துக்கொண்டு மென்மேலும் கல்லூரிக்கு பெருமைகளை தேடித் தர வேண்டும் என்று தன்னம்பிக்கை ஊட்டினார். கிருஷ்ணகிரி மாவட்ட நேரு யுவகேந்திரா அலுவலர் திரு . அப்துல் காதர் அவர்கள் வாழ்த்துரை ஆற்றினார் .

விழாவில் பேச்சு ,கதை கட்டுரை , தனிநபர் , குழு நடனம், புகைப்பட போட்டி, நாட்டுப்புறப் பாடல்கள், பரதநாட்டியம் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கல்லூரியில் நாட்டு நல பணித்திட்ட அலுவலர்களான திரு I.ஸ்டீபன் விக்டர் ஆண்டனி , திரு. இரா. சரவணகுமார் மற்றும் பல்வேறு துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவின் நிறைவாக விலங்கியல் துறை தலைவர் கோ. வேல்சாமி அவர்கள் தொகுத்து வழங்க , விழா இனிதே நிறைவு பெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *