மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் தில் பணியாற்றும் உதவி பேராசிரியர் களுக்கு இணை பேராசிரியர் பதவி உயர்வுக்கான நேர்முகத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்தது. ஆனால், அதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு இதுவரை வெளியிடப்பட வில்லை. இது குறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

இந்த விவகாரத்தில் மெத்தனமாக செயல்படும் பொறுப்பு பதிவாளரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகக்குழு ஒருங்கி ணைப்பாளர் மற்றும் கல்லூரிக்கல்வி இயக்குனரிடமும், உயர்கல்வித்துறை செயலரிடமும் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

அத்துடன், ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் பதவி உயர்வு ஆணை வெளி யிடுவது குறித்த விவகாரத்தை யும் தீர்மானமாக நிறைவேற்றி உயர்கல்வித்துறை செயலருக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந் நிலையில், ஆட்சிமன்றக்குழு விவாதத்திற்கு இந்த விவகாரம் சேர்க்கப்படவில்லை என்று தெரிகிறது. அதனை தொடர்ந்து, பேராசிரியர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று காலை முதல் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டம் நேற்று இரவு வரை நீடித்தது. இதனால், பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பதவி உயர்வு ஆணை வெளியிடுவது என்ற தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *