பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242-சி மாவட்டத்தின் எல்லைகள் கடந்த மனிதநேயம் ஆண்டின் முதல் காலாண்டு விருது வழங்கும் விழா..
அவார்ட் மாவட்ட தலைவர் அனீஷ் குமார் தலைமையில் சிறப்பு விருந்தினர் மாவட்ட ஆளுநர் ராஜசேகர், சிறப்பு அழைப்பாளர்கள் கேட் ஏரியா லீடர் லயன் பாண்டியராஜன் மற்றும் கவுன்சில் சேர்பெர்சன் லயன் அய்யாதுரை இணைந்து விருதுகளை வழங்கினார்கள்.
இதில் சிறந்த சேவைக்காகவும்,உறுப்பினர் சேர்க்கைக்காகவும், புதிய கிளப் உருவாக்கியதற்கும்,உலக சேவை வாரத்தில் அதிக சேவைகள் செய்ததற்கும் ஜி.எஸ்.டி லயன் செந்தில்குமார் மிஷன் 1.5 விருது, யுனிக் சர்வீஸ் ஆக்டிவிட்டி விருது, உலக சேவை தின விருது, புதிய சங்கம் ஸ்பான்சர் விருது , பார் எக்ஸலன்ஸ் விருது உள்ளிட்ட
விருதுகளைப் பெற்றார்.
வட்டாரத் தலைவர் லயன் சுப்பு செந்தில்குமார் பார் எக்ஸலன்ஸ் விருதைப் பெற்றார் உலக சேவை தின மாவட்டத் தலைவர் கதிரவன் பார் எக்ஸலன்ஸ் விருதைப் பெற்றார்.
டயாபடிஸ் மாவட்ட தலைவர் லயன் மோகன்ராஜ் பார் எக்ஸலன்ஸ் விருதைப் பெற்றார்.
சிறந்த மக்கள் சேவைக்காகவும், விழிப்புணர்வு சேவைகளுக்காகவும்
கோவை நேரு நகர் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் லயன் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர்கள் லயன் தேஜஸ்வினி செந்தில்குமார் (நிர்வாகம்)
லயன் திவ்யதர்ஷினி ஹரீஷ் (செயல்), பொருளாளர் லயன் தாமிரா செந்தில்குமார் ஆகியோர் 3 ஸ்டார் விருதைப் பெற்றனர்.
நூற்றுக்கு மேற்பட்ட சங்கங்களுக்கு முன்னூறுக்கும் மேற்பட்ட 5 ஸ்டார், 4 ஸ்டார், 3 ஸ்டார் விருதுகளை முதல் துணை ஆளுநர் செல்வராஜ், இரண்டாம் துணை ஆளுநர் சூரி நந்தகோபால், கூட்டுமாவட்ட பொருளாளர் நித்தியானந்தம், GET ஒருங்கிணைப்பாளர் லயன் கருணாநிதி, முன்னாள் ஆளுநர்கள் டாக்டர். பழனிச்சாமி, ராம்குமார் ஆகியோர் விருதுகளை வழங்கினார்கள்.மாவட்ட அமைச்சரவை நிர்வாகிகள் ரவிஷங்கர், ராஜசுந்தரம், ராஜ்மோகன், முத்துசாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.
இந்த விழா கோவை சுந்தராபுரம், லிண்டஸ் கார்டனில் நடைபெற்றது.
