நாமக்கல்

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலை கல்லூரி வளாகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழி சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணி நடந்தது

மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர்
ரெ.சுமன் தொடங்கி வைத்தார் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956 ஆம் நாளினை நினைவுகூறும் வகையில் ஆட்சிமொழி சட்ட வாரம் ஒரு வார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 18.12.2023 முதல் 27.12.2023 வரை  ஒரு வார காலத்திற்கு ஆட்சிமொழிச் சட்ட வார விழா நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டு, 

ஆட்சி மொழி திட்ட விளக்க கூட்டம், கணினி தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கம், கணினி தமிழ் ஒருங்குறி பயன்பாடு குறித்து அரசுப் பணியாளர்களுக்குப் பயிற்சி வகுப்பு, ஆட்சிமொழி மின்காட்சியுரை பயிற்சி வகுப்பு, ஆட்சிமொழி சட்டம் – வரலாறு, அரசாணைகள், மொழிப்பயிற்சி, மொழிப்பெயர்ப்பும், கலைச்சொல்லாக்கமும், தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுதல் குறித்த பயிற்சி வகுப்பு, தமிழில் பெயர் பலகை வைக்க வலியுறுத்தி வணிக நிறுவன உரிமையாளர்களுடன் கலந்துரையாடல், ஆட்சிமொழி பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து, இன்றையதினம் ஆட்சி மொழி சட்ட வார விழாவையொட்டி நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலை கல்லூரி மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியானது நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலை கல்லூரி வளாகத்தில் தொடங்கி  நாமக்கல் பேருந்து நிலையம், மணிகூண்டு, வழியாக சென்று மீண்டும் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலை கல்லூரி வளாகத்தில் முடிவடைந்தது.

இப்பேரணியில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பதாகைகள் ஏந்தியவாறு, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர் இதில் பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தி காட்டப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்  பொ.பாரதி, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலை கல்லூரி முதல்வர் மா.கோவிந்தராசு, துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *