கடலூர் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தினை
மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார்

கடலூர்,நகர அரங்கம் அருகே, மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளி மாணவ,மாணவிகள் பங்கேற்ற பேரணி மற்றும் மின்னணு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்,

மழைநீர் சேகரிப்பு மற்றும் அதன் கட்டமைப்பு பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னனு வீடியோ வாகனத்தின் மூலம் விழிப்புணர்வு காணொலி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்கு திட்டமான மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை மீண்டும் தமிழகமெங்கும் செயல்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மழைநீர் சேகரிப்பு மற்றும் அதன் கட்டமைப்பு பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னனு வீடியோ வாகனத்தின் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்த வாகனத்தின் மூலம் 31.10.2025 முதல் 04.11.2025 முடிய 5 நாட்களுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கனவுத் திட்டத்தை மக்களிடையே கொண்டு செல்லும் வகையில் ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. இதனால் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தைப் ற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தபடுகிறது. மேலும், மழைநீரை சேகரிப்பதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயருவதுடன் மக்களின் வாழ்வாதாரமும் மேம்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் செந்தில்குமரன்,நிர்வாகப் பொறியாளர்கள் மாரியப்பா, வினோத்ராஜா,தமிழ்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *