போக்குவரத்து துறையின் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதமானது அடுத்த மாதம் – 14-ந்தேதி வரை கொண்டாடப் படுகிறது.

இதனையொட்டிவட் டார போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு – நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மதுரை சரக போக்குவரத்து இணை ஆணையர் சத்தியநாறாயணன் தலைமையில், திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் இரவு நேரங்களில் ஏற்படும் விபத்தினை தவிர்க்கும் வகையில் ஓட்டுனர், நடத்துனர் கள் மற்றும் கனரக வாகனங்க ளின் கிளீனர்கள் ஆகியோருக்கு டீ வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், வட்டார போக்குவரத்து அலுவலர் சிங்காரவேலு மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உலகநா தன், முரளி, சரவணக்குமார், சம்பத்குமார். செல்வம், சுகந்தி ஆகியோர் வாகன ஓட்டிகள் மற்றும் பாதயாத்திரை செல்லும் நபர்களுக்கு டீ கொடுத்து விழிப் புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும், போதிய தூக்கமின்மை, உட லுக்கு தீங்கு விளைவிக்கும், போதை தரக்கூடிய பொருட்களை அருந்திவிட்டு வாகனத்தை இயக்குதல் கூடாது, நெடுஞ்சாலைகளில் பயணிக்கின்ற போது சாலையின் இடதுபுறமே செல்லவேண்டும், தீ அணைக்கும் வாகனம் மற்றும் அவசரகால ஆம்புலன்ஸ் ஊர்திக்கு வழி விட்டு செல்லவேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இது போல், இருசக்கர வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. சாலை பாதுகாப்பு பற்றி எடுத்துக்கூறி சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *