நெல் , கரும்பு குவிண்டால் விலையை உயர்த்தி தர வலியுறுத்தி வருகின்ற 29-ந்தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட உள்ளதாக மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் பேட்டி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாய சங்கத்தின் மாநில , மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சங்கத்தின் மாநில தலைவர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட, நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக காவிரி விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் பி ஆர் பாண்டியன் கூறுகையில்..

தமிழக அரசு மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளான் சட்டங்களை விட எந்த நாட்டிலும் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கொண்டு வராத நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 வெளி உலகத்துக்கே தெரியாமல் சட்டமன்றத்தில் கூட்டணி கட்சிகள் கூட விவாதத்தில் பங்கேற்க முடியாத நிலையை உருவாக்கி கொண்டுவந்துள்ளது

நில ஒருங்கிணைப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக திருமப பெற வேண்டும் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ 3500 வழங்க வேண்டும் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ 5ஆயிரம் வழங்க வேண்டும் பயிர் காப்பீட்டு திட்டத்தை தமிழ்நாட்டிற்கு என தனி காப்பீட்டு வழிமுறைகளை கொண்டு வர வேண்டும் காப்பீட்டு திட்டத்தை கொண்டு வர வேண்டும் .

தற்போதைய காப்பீட்டு திட்டத்தில் இழப்பீடு வழங்குவதும் பிரிமியம் செலுத்துவதை ஒழுங்குபடுத்துவதும் கண்காணித்திட செயல்படுத்திட மாவட்ட அளவில் தனி நிர்வாக பிரிவை தமிழ்நாடு அரசு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜனவரி 29ஆம் தேதி தமிழகம் தழுவிய அளவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என எஸ் கே எம் அமைப்பு கட்சி சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கம் முடிவெடுத்திருக்கிறது

அந்த போராட்டத்தில் தமிழ்நாடு முழுமையிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் திருச்சிக்கு வர இருக்கிறார்கள் நாகப்பட்டினத்தில் கடந்த குறுவையில் அறிவிக்கப்பட்ட இடுப்பொருள் இழப்பிட்டு தொகையை 16 கோடி ரூபாயை இதுவரையிலும் விவசாயிகளுக்கு வழங்காமல் தமிழ்நாடு அரசு ஏமாற்றி இருக்கிறது உடனடியாக வழங்க வேண்டும் .

மத்திய அரசு மரபணு மாற்று விதைகளை கடுகு பயிர் மூலம் வணிகரீதியில் ஆய்வு செய்வதற்கான அனுமதி கொடுத்திருக்கிறார் இதை எதிர்த்து விவசாய அமைப்புகள் நேற்றைய தினம் வழக்கு முடிவுக்கு வந்துள்ளது இந்த நிலையில் மத்திய அரசாங்கம் மரபணு விதை மாற்றுக்கு மாற்று விதைகளை அனுமதிப்பதற்கு ஆதரவான வகையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமான ஒப்புதல் அறிக்கையை கொடுத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது

மரபணு மாற்று விதைகள் அனுமதிப்பதே மத்திய அரசு கொள்கை ரீதியாக கைவிட வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம் இதை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம். விவசாயி வேண்டுகோளின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு மாவட்டங்களை பிரிப்பதற்கும் சில மாநகராட்சிகளை விரிவாக்க செய்வதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை வேகமாக எடுத்து வருகிறோம்.

ஒரு பக்கம் நடவடிக்கைகளுக்கு வரவேற்பு இருந்தாலும் பெரும்பான்மையான கிராமப் பகுதி மக்கள் மிகப்பெரும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள் . குறிப்பாக விவசாயிகள் மக்களுடைய கருத்தை கேட்டு தான் மாவட்ட பிரிவினையையும் மாநகராட்சி விரிவாக்க நடவடிக்கைகளையும் துவங்க வேண்டும் குறிப்பாக மாவட்ட பிரிவினை மேற்கொள்வதற்கு முன்னதாக வருவாய் கிராமம் வருவாய் கிராமங்களை உரிய முறையில் இணைப்பு ரீதியாக அதனை ஒழுங்குபடுத்தி விட்டு தான் மாவட்ட பிரிவினையை மேற்கொள்ள வேண்டும்

இதனை தமிழ்நாடு அரசு கொள்கை பூர்வமாக மேற்கொள்ள வேண்டும் இதற்கான கருத்துக்கணிப்பு கூட்டங்களை நடத்தி மக்களின் கருத்து பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில் மட்டுமே தமிழ்நாடு அரசு பிரிவினை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *