தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒன்றியம், வடக்குப்புதூர் ஊராட்சி, தெற்குப்புதூர் கிராமத்தில் தமிழக முதல்வரின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.
வடக்குப்புதூர் ஊராட்சி மன்றத்தலைவர் வேலுச்சாமி முன்னிலை வகித்து
முகாமை துவக்கி வைத்தார்.

திருநெல்வேலி மண்டல இணை இயக்குநர் மரு.ஸ்ரீஹரி , திருநெல்வேலி கோட்ட உதவி இயக்குநர் மரு.சுமதி மற்றும் சங்கரன்கோவில் உதவி இயக்குநர் மரு.திருநாவுக்கரசு ஆகியோரின் அறிவுரையின் படி
இம் முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் குழு வசந்தா, சிமியோன் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் முத்து மாரியப்பன் ஆகியோர் கொண்ட குழுவினர்
சுமார் 243 பசுக்கள்,647 செம்மறி ஆடுகள், 154 வெள்ளாடுகள், 224 கோழி களுக்கு குடற்புழுநீக்கம், கனமழையால் பாதிப்புற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் சினையுறா பசுக்களுக்கு சிகிச்சை அளித்தும் சிறந்த கிடேரி கன்றுகள் மற்றும் நல்ல முறையில் பசுக்களை பராமரிப்போருக்கான பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் இம்முகாமில் சினை பரிசோதனை, செயற்கைமுறை கருவூட்டல்,ஆண்மை நீக்கம்,செல்ல பிராணிகள் சிகிச்சை ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சினையுறா பசுக்களுக்கு தாது உப்புக்கலவை வழங்கப்பட்டது. கிசான் கடன் அட்டை மூலம் கால்நடை விவசாயிகளுக்கு வழங்கப்படும் வட்டியில்லா கடன் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

இறுதியில் வடக்குப்புதூர் கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர் வசந்தா
நன்றியுரை வழங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *