பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை கட்சி
அறிவிக்கும் பாபநாசத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் பேட்டி….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் புதிய தனியார் திருமண மண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸின் தலைவர் ஜிகே வாசன் கலந்து கொண்டார் அதன் பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை கேட்பதற்கு அரசு செவி சாய்க்கவில்லை உடனடியாக நம்முடைய தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைக்கக் கூடிய நிலையை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் எனவும் பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பேன் என்று அறிவித்து பலர் வெளியூருக்கு சென்ற காரணத்தினால் அவர்களுக்கு இல்லை என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது

மொத்தத்தில் யார் யாருக்கு கொடுக்க வேண்டுமோ கோட்பாடுகளுக்கு ஏற்றவாறு வெளியூர்களில் இருந்து மீண்டும் அவர்கள் பகுதிக்கு வருபவர்களுக்கும் அந்த ஆயிரம் ரூபாய் பணத்தை உடனடியாக அரசு கொடுக்க வேண்டும் என தாமாக சார்பில் வலியுறுத்துவதாகவும் ராமர் கோயில் அயோத்தி திறப்பு விழா என்பது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு எனவும் இந்தியாவிலே அது ராமர் கோயிலாக இருந்தாலும் சரி மசூதியாக இருந்தாலும் சரி ஆலையமாக இருந்தாலும் சரி இந்தியாவினுடைய கலாச்சாரம் பண்பாட்டிற்கு எடுத்துக்காட்டாக இருந்தால் அது இந்திய மக்களுக்கு சம்மதம் என்பதிலே மாற்று கருத்து கிடையாது அந்த வகையிலே பிரதமர் அவர்கள் இரண்டு நாள் ஆன்மீக பயணத்தை தமிழகத்தில் மேற்கொண்டு இருக்கிறார் குறிப்பாக ராமர் சென்ற கோயில்களுக்கெல்லாம் செல்வது என்பது ஒரு தனி சிறப்பு அவரது தெய்வ பக்திக்கும் தேசபக்திக்கும் எடுத்துக்காட்டு எனவும் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை கட்சி
அறிவிக்கும் எனவும் தெரிவித்தார்.

பேட்டி :

ஜி.கே. வாசன்-தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *