பாபநாசம் அருகே வெள்ளி விழா காணும் புனித அந்தோணியார் ஆலயம் சிறப்பு திருப்பலி நடைபெற்றது ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் ஊராட்சியில் சான்றோர் தோப்பு தெருவில் அமைந்துள்ளது புனித பதுவை அந்தோணியார் ஆலயம் 1998 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இவ்வாலயம் 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு வெள்ளி விழா கொண்டாடப்பட்டது.

கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் ஏராளமான பெண்கள் உட்பட கிறிஸ்தவர்கள் முக்கிய வீதிகள் வழியாக பேண்ட் வாத்தியங்கள் முழங்க வானவேடிக்கையுடன் மலர் தூவியவாறு வலம் வந்து ஆலயத்தை வந்தடைந்தனர்

பின்னர் வெள்ளிவிழா சிறப்பு திருப்பலி மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஆலயம் புனிதப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து கும்பகோணம் மறை மாவட்டத்தின் நியமன ஆயர் அமிர்தசாமி முன்னிலையில் வெள்ளி விழா நினைவு கொடிமரம் புனித படுத்தப்பட்டது. வெள்ளி விழாவில் ஆலய பங்குத்தந்தை அமல்ராஜ் இறை மக்கள் நாட்டாமைகள் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *