மாற்றுத்திறனாளிகள் கவிஞர் இரா .இரவி

உடலில் குறை இருந்தாலும்
உள்ளத்தில் குறைவற்றோர்
மாற்றுத்திறனாளிகள்

குறையைக் குறையை
நினைக்காதவர்கள்
மாற்றுத்திறனாளிகள்

வியக்கும் வண்ணம்
விந்தைகள் புரிவோர்
மாற்றுத்திறனாளிகள்

புறப்பார்வை இல்லாவிட்டாலும்
அகப்பார்வை ஆயிரம் பெற்றவர்கள்
மாற்றுத்திறனாளிகள்

உடலுறுப்பை இழந்தபோதும்
தன்னம்பிக்கை இழக்காதவர்கள்
மாற்றுத்திறனாளிகள்

வாய்ப்பு வழங்கினால்
சிகரம் தொடுபவர்கள்
மாற்றுத்திறனாளிகள்

சாதனை புரிவதில்
சரித்திரம் படைப்பவர்கள்
மாற்றுத்திறனாளிகள்

சளைத்தவர்கள் அல்ல
நிருபித்துக் காட்டுபவர்கள்
மாற்றுத்திறனாளிகள்

முயற்சித் திருவினையாக்கும்
மெய்பித்துக் காட்டுபவர்கள்
மாற்றுத்திறனாளிகள்

இல்லை என்ற கவலை
என்றும் இல்லாதவர்கள்
மாற்றுத்திறனாளிகள்

விழிகளை இழந்தபோதும்
விரல்களை விழிகளாக்கியவர்கள்
மாற்றுத்திறனாளிகள்

குரலினைக் கேட்டே
யார் ?என்று உரைப்பவர்கள்
மாற்றுத்திறனாளிகள்

சக மனிதராக நேசியுங்கள்
சங்கடப்படும்படிப் பார்க்காதீர்கள்
மாற்றுத்திறனாளிகளை!

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *