திருப்பத்தூரில் நகர திமுக சார்பில் வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி சின்னக்கடை தெரு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வியாழன் கிழமை இன்று பிற்பகல் 12.30 மணி அளவில் திருப்பத்தூர் நகர திமுக சார்பில் வார்டு செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கான BLA 1 மற்றும் BLA 2 ஆலோசனை கூட்டம் நகர செயலாளரும் மாவட்ட ஆவின் தலைவர் எஸ் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜி, திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி, மாவட்ட துணை செயலாளர் மோகன், நகர்மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன், நகர்மன்ற துணை தலைவர் சபியுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதற்கு சிறப்பு அழைப்பாளராக திமுகவின் மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர் கம்பன் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் அரசு , மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தசரதன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைப்பாளர் வெங்கடேசன், திமுக நிர்வாகிகள் ஐயப்பன், செல்வம் மற்றும் திமுகவின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *