ஜிட்டோனப்பள்ளியில் இரண்டு வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா.

அமைச்சர். அர.சக்கரபாணி திறந்து வைத்தார்.

ஜெகதேவி அடுத்த ஜிட்டோனப்பள்ளி தொடக்கப்பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜெகதேவி ஊராட்சி ஊராட்சி ஜிட்டோனப்பள்ளி தொடக்கப்பள்ளியில்
ரூ.30.45 இலட்சம் மதிப்பீட்டில் 2022-23 ஆண்டு குழைந்தைகள் நேயபள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.30.45 இலட்சம் மதிப்பீட்டில்இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர். அர.சக்கரபாணி
மாவட்ட ஆட்சியர் கே.எம் சரயு, கூடுதல் ஆட்சியர் வந்தனா கார்க், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில், பையாஸ் அகமது, வட்டாட்சியர் மகேஷ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர்கள் செல்வம், பூம்பாவை, பெரியசாமி, ஒவர்சர் நாகராஜ், ஒன்றிய துணை செயலாளர் ராஜ் (எ) ராஜதுரை, இலக்கிய அணி அமைப்பாளர் பாலாஜி, விவசாய அணி துணை அமைப்பாளர் காமராஜ், ஊராட்சி செயலாளர் செங்கதிர் செல்வன், திமுக பிரமுகரும் தொழிலதிபருமான அன்பரசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *