அலங்காநல்லூர்

மதுரை மேற்கு ஒன்றியம் சிறுவாலை ஊராட்சியில் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட நாட்டு நல திட்ட பணிகள் முகாம் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியம்மாள்ராஜு, தலைமையிலும் ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் முன்னிலையிலும் நடைபெற்றது சிறப்பு விருந்தினர்கள்

வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியின் என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் கண்ணன், திட்ட அலுவலரும் பேராசிரியர்களுமான பாலமுருகன், முருகேசன், ஆகியோர் மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். நேற்று புதன்கிழமை முதல் வரும் 7 நாட்களுக்கு இந்த முகாம் நடைபெற உள்ளது

இந்த கிராமத்தை எவ்வாறு தூய்மையாக வைத்துக் கொள்வது தினந்தோறும் காலை தூய்மை என்ற முழக்கத்துடன் அனைத்து இல்லங்களுக்கும் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டுவதை நிறுத்தி மக்கு குப்பை மற்றும் மக்காத குப்பை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்குவது திறந்தவெளியில் மலம் கழிப்பதை நிறுத்தி அனைத்து இல்லங்களிலும் கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொள்வது தண்ணீர் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து மாணவர்கள் எடுத்துரைத்தனர்.

இதில் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி என் எஸ் எஸ் ஒருங்கிணைப்பாளர் கண்ணன், திட்ட அலுவலர்களும் பேராசிரியர்களுமான பாலமுருகன், முருகேசன், பொதும்பு கூட்டுறவு முன்னாள் தலைவர்
மலர்கண்ணன், துணைத் தலைவர் ராகுல், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெகதா ராதாகிருஷ்ணன், அம்மு லோகேஸ்வரன், மற்றும் சிறுவாலைசெல்வம், குருசாமி, உலகநாதன், மாணிக்கம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *