திருவொற்றியூர்

மணலி மண்டல குழு கூட்டம் மண்டல குழு தலைவர் ஏ வி ஆறுமுகம், மண்டல அலுவலர் கோவிந்தராசு, செயற்பொறியாளர் பிரதீப் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து கவுன்சிலர்கள் விவாதித்தனர்.

அதிகாரிகள் மற்றும் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணிகளை சரிவர செய்யாமல் இருப்பதாகவும் ஒரு சில கவுன்சிலர்கள் புகார் அளித்த நிலையில் மண்டல குழு தலைவர் மற்றும் அதிகாரி இதுபோன்ற நத்தனம் காட்டுவது கண்டிக்கத்தக்கது எனவும் இனிமேல் இதுபோல் நடக்காத வண்ணம் அதிகாரிகள் பணிகளை துரிதமாக செய்து முடிக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது

பின்னர் அதன்படி, வார்டு 15 மற்றும் 16 ஆகிய பகுதிகளில், கேஸ் நிறுவனம் மூலம் குழாய் புதைக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட சாலை வெட்டுகளை ஒரு கோடியே 35 லட்சத்து 95 ஆயிரம் செலவில் சீரமைக்கும் பணிக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேபோல் வார்டு 16ல் மாநகராட்சி துவக்கப்பள்ளி நடுநிலைப் பள்ளிகளுக்கு, 40 லட்ச ரூபாய் செலவில் 4 சமையல் அறைகள் கட்டும் பணிக்கான தீர்மானம் நிறைவேறியது.

வார்டு 18 ல் 6 கழிப்பிடங்களை ஒன்பது மாதங்களுக்கு 26 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவில் பராமரிக்கும் பணிக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வார்டு 17,ல் சாமுவேல் நகர் சுடுகாடு சாலையில், 88 லட்சம் ரூபாய் செலவில் தார் சாலை அமைக்கும் பணிக்கு தீர்மானம் நிறைவேறியது. 21 வது வார்டு பாடசாலை தெருவில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை எம்எல்ஏ மேம்பாட்டு நிதியான ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டும் பணிக்கான தீர்மான உட்பட, 43 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மண்டல குழு கூட்டத்தில், கவுன்சிலர்கள் நந்தினி, காசிநாதன், ராஜேந்திரன், தீர்த்தி, ராஜேஷ்சேகர், ஸ்ரீதரன், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *