தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சி கல்லூரியின் 53வது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.சிவகங்கை மறைமாவட்ட மேதகு ஆயர் முனைவர் லூர்து ஆனந்தம் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றினார்.

கல்லூரி செயலர் மற்றும் இல்ல தலைமை சகோதரி முனைவர் குயின்ஸ்லி ஜெயந்தி வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் அருட் சகோதரி முனைவர் சேசுராணி 2023-24 ஆம் ஆண்டிற்கான ஆண்டு அறிக்கையை வாசித்தார்.

இந்த 53வது ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் முதல்வரும் மற்றும் செயலாளருமான வில்சன் கலந்து கொண்டு மாநில நிதி நல்கையின் கீழ் ஆராய்ச்சியை மேற்கொண்டு நிறைவு செய்த பேராசிரியர்கள் பல்வேறு இதழ்களில் ஆய்வு கட்டுரை வெளியிட்ட பேராசிரியர்கள் மற்றும் ஆய்வில் பங்கு பெற்ற மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.மேலும் மாணவிகளான நீங்கள் வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொண்டு நல்லொழுக்க நெறிகளை கடைபிடித்து தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும் என்று தனது கருத்தை மாணவிகளுக்கு அறிவுரையாக கூறினார்.

அதனைத் தொடர்ந்து துறைவாரியாக மதிப்பெண் தரவரிசையில் முதலாம் மற்றும் இரண்டாம் இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கெளரவித்தனர். 2023 – 24 ஆண்டில் பணி நிறைவு பெறும் பேராசிரியர்கள் மற்றும் வெள்ளி விழா காணும் அலுவலக பணியாளர்கள், கடைநிலை ஊழியர்களை கெளரவித்தனர்.

இவ்விழாவின் இறுதியில் கல்லூரி பேரவை தலைவரும் விலங்கியல் துறை இணை பேராசிரியருமான முனைவர் சகாயராணி நன்றியுரையாற்றினார்.

மாணவிகளின் பரதம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வை நிகழ்த்தினர்.இவ்விழாவில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *