வலங்கைமான் செட்டி தெரு ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா உடன் திருவிழா தொடங்கியது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டி தெரு ஸ்ரீவேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில், கடந்த மார்ச் ஒன்னாம் தேதி வெள்ளிக்கிழமை காலை எட்டு மணிக்கு ஸ்ரீ மகா கணபதி ஹோமமும்,10 மணி அளவில் ஸ்ரீ அம்பாளுக்கு அபிஷேக ஆராதனையும் அதைத் தொடர்ந்து தீபாராதனையும், அருட்பிரகாசம் வழங்குதலும், அன்னதானமும் நடைபெற்றது.
மாலை ஆறு மணி அளவில் அம்பாள் திருவுருவப்படம் வீதி உலா காட்சி நடைபெற்றது. பக்தர்கள் நறுமண மலர்களை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தினர்.
இரவு திருவுருவப்படம் ஆலயத்தை வந்தடைந்த உடன் அம்மனுக்கு பூச்செறிதல் விழா, தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
நேற்று மூணாம் தேதி மதியம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், அருட்பிர சாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலை ஆறு மணி அளவில் வலங்கைமான் குடமுருட்டி ஆற்றில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு முதல் காப்பு கட்டப்பட்டு, சக்தி கரகம் எடுத்து வீதி உலா காட்சி நடைபெற்று ஆலயம் வந்தடைந்து தீபாராதனையும், பக்தர்களுக்கு அருட்பிர சாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். வரும் பத்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் காப்பு கட்டுதளும், அதனைத் தொடர்ந்து தினசரி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா காட்சியும் நடைபெறுகிறது. வரும் 17 -ம் தேதி புகழ்பெற்ற திருவிழாவும்,24 -ம் தேதி புஷ்ப பல்லாக்கு திருவிழாவும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் அ.ரமேஷ், ஆய்வாளர் க. மும்மூர்த்தி, செட்டி தெரு நிர்வாகிகள், செட்டி தெரு வாசிகள், நகரவாசிகள், ஸ்ரீ சீதளா தேவி இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் உபயதாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்